Breaking News

குறுங்குடி வெடி விபத்து தமிமுன் அன்சாரி MLA இரங்கல்..!

நிர்வாகி
0

காட்டுமன்னார்குடி அருகே குருங்குடி எனுமிடத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 9 பெண்கள் உயிரிழந்த செய்தி கேட்டு வேதனையடைந்தோம். அவர்களுக்கு எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

அரசு தற்போது உயிரிழந்தோருக்கு தலா 2 லட்சம் அறிவித்திருக்கும் நிலையில், அதை உயர்த்தி கொடுத்திட ஆவணம் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம். இவண், மு.தமிமுன் அன்சாரி MLA, #பொதுச்செயலாளர், #மனிதநேய_ஜனநாயக_கட்சி

Tags: செய்திகள்

Share this