Breaking News

லால்பேட்டை மாநகரில் 75 ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டை நோக்கி நடைபெறு‌ம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி

நிர்வாகி
0

லால்பேட்டை மாநகரில் ஷைகுல் மில்லத்‌ இளைஞர் மன்றம் மற்றும் சீரத் கமிட்டி சார்பில் வருடந்தோறும் ரபிஉல் அவ்வல் மாதம் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி 75 ஆண்டுகளைக் கடந்து நூற்றாண்டை நோக்கி நடைபெற்று வருகிறது . உலக மக்களுக்கு வாழ்க்கை நெறி முறைகளை போதிக்கும் வள்ளல் நபியின் வாழ்க்கை வரலாற்றையும், மாநபியின் மாண்புகளையும், மாநபியின் புகழும் பேசப் படுகின்றன.

இந்த சிறப்பு வாய்ந்த நிகழ்வு இவ்வருடமும் வழக்கமான உற்சாகத்துடன் நடைப்பெற்று வருகிறது.அல்ஹம்துலில்லாஹ்

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் நிகழ்விலும் பெண்கள் தாங்கள் இல்லங்களில் இருந்தும் கேட்டு வருகின்றனர் .

இந்நிகழ்விற்காக நமதூரில் உள்ள அனைத்து தரப்பினரும் நன்கொடை வழங்கி‌ மகிழ்ந்து வருகின்றனர்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே கியாமத் நாள் வரை சீரும் சிறப்புடன் நடைப் பெற அல்லாஹ் அருள் புரிவானாக..

Tags: லால்பேட்டை

Share this