Breaking News

கேள்விக்கு பதில் சொல்ல ரெடியா?

நிர்வாகி
0

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய சொந்தங்களே அல்லாஹ்விடம் நம்மை, நம் வாரிசுகளை பதில் சொல்ல தயார் செய்து விட்டோமா ?

அதற்காக பெற்றோர்கள் செய்த முயற்சி என்ன தற்போதிய சூழ்நிலையில் 0% சதவீதம்தான் ஹதீஸில் தெளிவாக சொல்லப்பட்டு விட்டது ( ما مِن مَوْلُودٍ إلَّا يُولَدُ علَى الفِطْرَةِ، فأبَواهُ يُهَوِّدانِهِ أوْ يُنَصِّرانِهِ أوْ يُمَجِّسانِهِ) )

ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தின் அடிப்படையில்தான் பிறக்கிறது ஆனால் அவர்களின் பெற்றோர்கள் யூதர்களாகவும்,நஸ்ரானிகளாகவும், மஜூஸிகளாகவும் ஆக்குகிறார்கள்

ஆக உச்ச கட்ட பாவங்களை செய்வதற்கு தங்களை ஒப்பிடும் பொழுது அப்போ மற்ற பாவங்களின் நிலை இது எல்லாவற்றுக்கும் உங்களுக்கு பங்குண்டு இப்படியும் ஒரு ஹதீஸ் ( منْ وُلِد لهُ ولدٌ ؛ فلْيُحسنِ اسمَهُ وأدبَه، فإذا بلغ فلْيُزوِّجهُ، فإن بلغ ولم يُزوِّجْهُ فأصاب إثمًا ؛ فإنما إثمهُ على أبيهِ)

தங்களுக்கு ஒரு குழந்தை பிறந்து அதற்கு அழகிய பெயர் வைத்து, ஒழுக்கம் உள்ள குழந்தையாக வளர்த்து, வயதிற்கு வந்து விட்டால் திருமணம் செய்து வைக்கட்டும் என்று நபி(ஸல்) சொல்லி விட்டு சொன்னார்கள் அவன் வயதிற்கு வந்து திருமணம் செய்து வைக்காமல் எதாவது பாவம் செய்து விட்டால் அவனுடைய பாவமெல்லாம் தந்தைக்கும்தான்

பெற்றோர்களே இந்த ஹதீஸ் உங்களுக்கு அச்சம் ஊட்டவில்லையா ஒழுக்கமாக குழந்தைகளை வளருங்கள் நம் இஸ்லாமிய வாலிபர்கள், சிறார்கள் கஞ்சாவிலும், மதுவிலும் மூழ்கி கிடக்கிறார்கள் இதுவெல்லாம் தெரிந்தும் தெரியாமல் இருக்கிறீர்களா? நாளை அல்லாஹ்விடம் பதில் சொல்ல தயாராக இருக்கிறீர்களா அல்லாஹ்வின் பிடி கடுமையானது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் சிகரெட் பாவம் இல்லை சாதாரணமாக நினைத்தோம் மது நுழைந்தது மதுவை சாதாரணமாக நினைத்தோம் விபச்சாரம் நுழைந்து ,கொலைகள் பெருகியது இன்று கஞ்சாவை கண்டு கொள்ளவில்லை யென்றால் நாளை இதையும் அரசாங்கமே நடத்தும் அப்பரம் நம் பிள்ளைகளின் நிலை என்னவாகும் உங்களுடைய பெற்றோர்கள் உங்களை நல்ல பிள்ளையாக வளர்த்தார்கள் ஆனால் நீங்கள் உங்கள் பிள்ளைகள் எப்படி கெட்டால் என்ன என்று கண்டு கொல்லாமல் இருப்பது எந்த விதத்தில் நியாயம் ஒரு குழந்தை சீர் திருத்தம் பெறுவது பெற்றோர்களோடு முடிவதில்லை பள்ளியின் இமாம்கள், முத்தவல்லிகள், ஒவ்வொரு சாமானிய மக்களுக்கும் பங்குண்டு எப்போது நம் ஊர் பிள்ளைகளை ஸாலிஹான பிள்ளைகளாக ஆக்கப்போகிறோம் கீழே உள்ள ஹதீஸ் நம் எல்லோருக்கும் பங்குண்டு என்று பேசுகிறது كلُّكم راعٍ وكلُّكم مسئولٌ عن رعيتِه ، ، فالأميرُ راعٍ ومسئولٌ عن رعيتِه ، والرجلُ راعٍ ومسئولٌ عن زوجتِه وما ملكت يمينُه ، فاتقوا اللهَ وما ملكت أيمانُكم ، والمرأةُ راعيةٌ لحقِّ زوجِها ومسئولةٌ عن مالِه ، وكلُّكم راعٍ وكلُّكم مسئولٌّ ، فأعِدُّوا لتلك المسائلِ جوابًا . قالوا : يا رسولَ اللهِ وما جوابُها ؟ قال : أعمالُ البرِّ

ஃபெஸ்ட் அமீர் (முத்தவல்லிகள், இமாம்கள்,அமைப்பு தலைவர்கள்) இந்த மூவரிடம் கேட்க்கப்படும்

மூவரிடமும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல பதில் இருக்கா ? யோசிக்க வேண்டும்

அடுத்து ஒரு கணவன் தனது மனைவியை பற்றியும் ஒரு மனைவியிடத்தில் கணவனின் உரிமைகளை பற்றியும் கேட்கப்படும் பதில் இருக்கா தம்பதிகளே?

இப்படி எல்லோரும் கேள்வி கேட்கப்படுவார்கள் பதில் சொல்லமுடியாமல் நரகத்திற்கு அதிகமாக போகுபவர்கள்தான் ஜாஸ்தி என்று நமக்கு மார்க்கம் சொல்கிறது

விழித்துக்கொள்ளுங்கள் சமுதாய சொந்தங்களே நானும் கஞ்சா சம்மந்தமாக வரக்கூடிய செய்திகள் யெல்லாம் இஸ்லாமிய சொந்தங்கள் அதிகம் இருக்ககூடிய பகுதியில்தான் விற்கப்படுகறது என்று செய்திகளில் பார்க்கிறேன் ஏதோ சூழ்ச்சி இருக்கு படைத்த ரப்பிற்கே வெளிச்சம்

கண்ணியத்திற்குரிய மேய்ப்பவர்களே நாம் அனைவரும் ஹலாலை பற்றி சொல்ல வில்லையென்றாலும் பரவாயில்லை ஹராமை பற்றி தெளிவாகவும், கடுமையாகவும் எடுத்து சொல்லுவோம் தானாகவே ஹராம் அழிந்து ஹலால் உயர்ந்து விடும் பெருகிவிடும்

அல்லாஹ்விடம் நானும் கேள்வி கேட்க்கப்படுவேன் என்ற அச்சத்தில் எழுதப்பட்ட சுருக்கமான உபதேசம் கலந்த விழிப்புணர்வு அப்துஸ்ஸமது மன்பயீ JMA பாசறை லால்பேட்டை

Tags: இஸ்லாம்

Share this