ஜாகீர் உசேன் நகரில் பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இம்தாத் இந்தியா இணைந்து இலவச தகவல் சேவை மையம் திறப்பு விழா
பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் இம்தாத் இந்தியா இணைந்து நடத்திய தேசிய அளவிலான இலவச தகவல் மற்றும் சேவை மையம் திறப்பு விழா 11/10/2020 அன்று லால்பேட்டை Dr. ஜாகீர் உசேன் நகரில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா கடலூர் மாவட்ட தலைவர் பயாஸ் அஹமது மன்பஈ அவர்கள் தலைமையில் நடைபெற்றது
இமாம் கஸ்ஸாலி பள்ளி முன்னாள் கரஸ்பாண்டன்ட் அஹமதுல்லாஹ் அவர்கள் இம்தாத் இந்தியா சேவை மையத்தை திறந்து வைத்தார் இம்தாத் இந்தியாவின் தமிழ்நாடு திட்ட ஒருங்கிணைப்பாளர் சிராஜ்தீன் அவர்கள் சிறப்புரையாற்றினார் மேலும் இந்நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் கடலூர் மாவட்ட தலைவர் அப்துல் அலீம் சித்திக் மன்பஈ எஸ்டிபிஐ கட்சியின் கடலூர் மாவட்ட துணைத்தலைவர் ஷர்புதீன் ஷரீப் காட்டுமன்னார்குடி தொகுதி செயலாளர் நிஜார் அகமது லால்பேட்டை நகர தலைவர் அகமதுல்லா பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் லால்பேட்டை ஏரியா தலைவர் முபாரக் வடக்கு கொளகுடி ஊரச்சி மன்ற துணை தலைவர் ஆரிஃபுதீன் தொகுதி செயற்குழு உறுப்பினர் நஜ்முதீன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை