Breaking News

லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

நிர்வாகி
0

நவம்பர் 7- சனிக் கிழமை லால்பேட்டையில் நடைபெறும் காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி சிறப்பு மலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடத்துவது...

*மலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தரும் தாய்ச் சபை தேசியத் தலைவர் முனீருல் மில்லத் உள்ளிட்ட தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பளிக்க முடிவு.!*

லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நகர அலுவலகத்தில் 22/10/2020 வியாழக்கிழமை மாலை மஃக்ரிப் தொழுகைக்குப் பின் நடைப்பெற்றது. நகரத் தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார். மெளலவி தெளஃபீக் திருக்குர்ஆன் வசனம் ஓதினார். நகர செயலாளர் முஹம்மது ஆசிப் முன்னிலை வகித்தார். நகர துணைச் செயலாளர் எம்.அமானுல்லாஹ் அனைவரையும் வரவேற்றார்.

மறைந்த இ.யூ. முஸ்லிம் லீக் முன்னோடிகளான மெளலானா ரஃபீகிஷா நூரி, மெளலானா பைஜுர் ரஹ்மான் மதனி, எஸ்.ஏ.அப்துல் கப்பார் பாய்,எஸ்.எம்.யஹ்யா நானா,எஸ்.ஏ.பஜ்லுர் ரஹ்மான்,ஏ.அப்துல் பாஷித்,பெரியார் முஹம்மது அலி ஆகியோரின் மறுமை வாழ்விற்க்காக துஆ செய்யபட்டது.

அதேபோல் திருச்சியில் நடைப்பெற்ற மாநில நிர்வாகக் குழுவிலும் மறைந்த முன்னோடிகளுக்கு துஆ செய்யப்பட்ட செய்தி நகர நிர்வாக குழுவில் தெரிவிக்கப்பட்டது.

நகர துணைத் தலைவராக மெளலவி ஏ.ஜெ. முஹம்மது ஹிலூர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.அனீசுர்ரஹ்மான்,மாவட்ட துணைச் செயலாளர் எம்.ஏ.தாஜுத்தீன், நகர பொருளாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி,துணைச் செயலாளர் அபுசுஹுது ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்ச்சியில் எம்.எஸ்.முஹம்மது சித்தீக், எம்.ஹெச்.முஹிபுல்லாஹ், உபைதுர் ரஹ்மான், நகர துணைத் தலைவர் ஹாமிது, துணைச் செயலாளர் கலீமுல்லாஹ், மாவட்ட இளைஞரணி பொருளாளர் முஹம்மது முபாரக், நகர இளைஞரணி தலைவர் மெளலவி மஹபூப் அலி ரப்பானி, சாதுல்லா ஆகியோர் பங்கேற்றனர்.

லால்பேட்டை தாருஸ்ஸலாம் பதிப்பகம் சார்பில் இன்ஷா அல்லாஹ் 07/11/2020 அன்று லால்பேட்டையில் நடைபெற இருக்கும் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்களின் *பொது வாழ்வில் மணிவிழா காணும் காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி* சிறப்பு மலர் வெளீயிட்டு விழாவை நகர இ.யூ. முஸ்லிம் லீக் சிறப்பாக நடத்துவது. விழாவிற்க்கு வருகை தரும் தாய்ச் சபை தலைவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகர மாணவர் அணி தலைவர் அஸ்கர் நன்றி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவுப் பெற்றது.

Tags: லால்பேட்டை

Share this