Breaking News

சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் பிறந்தநாளை முன்னிட்டு லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கொடியேற்று விழா

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச்செயலாளராகவும், தமிழக தலைவராகவும் சிறப்பாக செயலாற்றிய சந்தனத் தமிழறிஞர், சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 04 -10 - 2020 ஞாயிற்றுக்கிழமை மாலை லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புதுபஜார் நான்குமுனை சந்திப்பில் கொடியேற்று விழா நடைபெற்றது.

லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.எம். அப்துல் வாஜித் நிகழ்விற்கு தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். மாவட்ட முஸ்லிம் லீக் துணைத் தலைவர் எஸ்.எம். அனீசுர் ரஹ்மான், நகர துணைத் தலைவர்கள் எஸ். ஹாமித், எம். சித்தீக், நகர துணைச் செயலாளர்கள் கே.எஸ். சஃபியுல்லாஹ் டி.ஏ. அபுஸ்ஸுஹுத், எம்.டி. கலீமுல்லாஹ் உள்ளிட்டோர் முன்னிலை வகிக்க, நகர முஸ்லிம் லீக் செயலாளர் எம்.எச். முஹம்மது ஆசிஃப் அனைவரையும் வரவேற்றார்.

நகர முஸ்லிம் லீக் முன்னோடிகள், சமுதாய பிரமுகர்கள் மற்றும் ஜாகீர் ஹுசைன் நகர் நிர்வாகிகள் மௌலவி இர்ஃபானுல்லாஹ், மௌலவி நூருஸ் ஸலாம் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.

நகர பொருளாளர் ஏ. முஹம்மது தைய்யூப் முஹிப்பி நன்றி கூறினார். மௌலவி வி.ஏ. அதாவுல்லாஹ் துஆச் செய்தார். நிகழ்விற்கான ஏற்பாடுகளை லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் சார்பில், மாவட்ட இளைஞரணி பொருளாளர் எம். முபாரக், நகர மாணவரணி தலைவர் ஏ.கே. அஸ்கர் அலி உள்ளிட்டோர் ஒருங்கிணைத்தனர்.

Tags: லால்பேட்டை

Share this