டிச.06 பாபரி மஸ்ஜித் நாடு தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டம் - எஸ்.டி.பி.ஐ. கட்சி அறிவிப்பு
டிசம்பர் 6 பாபரி மஸ்தித் தினத்தன்று, பாபரி மஸ்ஜித் நில உரிமை விவகாரத்தில், வழிபாட்டுத் தலங்கள் சட்டம்-1991 ஐ அமல்படுத்தி, பாபரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்தியும், பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும், மத்திய அரசு மற்றும் நீதித்துறையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது.
மேலும் டிசம்பர் 6 பாபரி மஸ்ஜித் தினத்தன்று, கருத்தரங்குகள், தெருமுனைக் கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் வாயிலாகவும் நாடு தழுவிய அளவில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நிகழ்ச்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: சமுதாய செய்திகள்