Breaking News

மிரள வைக்கும் கிருமிகள், அவைகளின் தாக்கம்! (டாக்டர் ஏ.பீ.முகமது அலி,ஐ.பீ.எஸ் (ஓ )

நிர்வாகி
0

உலகின் நம்பர் ஒன் நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்கா ஜனாதிபதியின் மணி மகுடம் நவம்பர் 3ம் தேதி நடந்த தேர்தலில் உருண்டது என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.அதற்கு முக்கிய காரணம் கொரானா என்ற கொடிய நோயினை அவர் கட்டுப் படுத்த தவறியதால் 1,45,000 அமெரிக்கர்களை உலகப் போரில் இழந்ததினை விட இழந்து விட்டோம் என்ற கோபத்தில் தான் என்றால் மிகையாகாது. அந்த நோய் உலக அளவில் 13, 46,576 மற்றும் இந்தியாவில் 1,30,993 உயிர்களையும் பலி வாங்கி விட்டது என்பது நமக்கும் வருத்தம் தானே! நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள் குளிர் காலம் என்பதால் மக்கள் மிகவும் கவனமாக தங்களை காத்துக் கொள்ள வேண்டுமென்று உலக சுகாதார இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. கிருமிகள் உயிரற்றத்தாக கருத முடியாது ஆனால் பரவக்கூடியது. கிருமிகள் தனது உயிரினை கிரியா ஊக்கியாக மாற்ற முடியாது. அவைகள் தன்னால் உயிர் வாழ முடியாது. வைரஸின் உயிரணுக்கள் மற்ற உயிரணுக்கள் மீது பற்றி பரவுகின்றது. அது மனிதர்கள் மீது படரும்போது சுகவீனத்தினை உண்டாக்கின்றது. உலகளவில் 3,20,200 பாலூட்டிகளை தாக்கின்றது(mammal ) அதனில் 219 கிருமிகள் மனிதர்களை தொற்றுகின்றது என்று அமெரிக்காவின் மருத்துவ நூலகம் கூறுகின்றது.

ஒவ்வொரு மழைக் காலத்திலும் மழைத்துளிகள் விழும்போது நாம் சிறுவர்களாக வாயினைத் திறந்து சுவைத்திருப்போம். ஆனால் அவைகள் கிருமிகளையும், நுண்ணுயிர்களும் தாங்கி வருகின்றன என்று தெரிவதில்லை. அவைகள் அதிஷ்டவசமாக நோய் கிருமிகளை பரப்பக்கூடியதல்ல என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மழைத்தண்ணீரை பானைகளில் சேகரித்து உபயோகிப்பதினை கண்டிருப்போம். ஆனால் அந்தத் தண்ணீரை கொதிக்க வைக்காமல் உபயோகிக்கக் கூடாதாம்.

நோய் கிருமிகளை வெரும் கண்ணால் பார்க்க முடியாது. அவைகளை டெலெஸ்கோப்பின்னால் மட்டுமே காண முடியும். நோய் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை வெவ்வேறாக பிரித்துப் பார்க்க முடியாது. பாக்ட்ரியா என்ற நுண்ணுயிர் தனி உறுப்பானது. அவை மற்ற உயிர்களை பரப்பக் கூடியது. குளிர் பிரதேசத்தில் ஒருவருக்கு நோய் கிருமிகள் பற்றினால் அவை நான்கு பேர்களுக்கு பரப்பிவிடும். ஆனால் வெயில் பிரதேசத்தில் தொற்று நோய் ஒருவரோடு நின்று விடும்.

ஆஸ்துமா மற்றும் டீ.பி. என்ற காச னாய் நிபுணர் ‘காதலின் தாஸ்’ கூறும்போது ஒருவருக்கு நோய் தொற்றி பின்பு குணமானால் அவருடைய உடலில் அவைகளை மறுபடியும் எதிர்க்கும் சக்தி மற்ற உயிரணுக்களுக்கு வந்து விடுகிறது என்கிறார். அவை பரவுவது அவரவர் உடல் வாகினை பொறுத்தது என்றும் கூறுகின்றார்.

ஒருவரை கொரானா தாக்கிவிட்டது என்பது வெளியே தெரியாது; அவை பாலின நோய் போன்றவையாகும். அவை ஒரு சிலரை அறியாமல் தாக்குவதில்லை, மாறாக நூற்றுக் கணக்கானவர்களை தாக்கக் கூடியவை என்று அமெரிக்காவின் (CDC) சென்டர் பார் டிஸீஸ் கண்ட்ரோல் கூறுகிறது. அந்த அமைப்பு நோய் பரப்பும் கிருமிகளை கண்டு பிடித்து அழிக்கும் தொழில் நுட்பத்திற்கான அமைப்பாகும். அதன் தலைவர் டாக்டர் பாசி என்பவர் இருக்கின்றார். அவருக்கும் அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கும் தான் ஏழாம் பொருத்தமாக இருக்கின்றது என்று நீங்கள் பத்திரிக்கை மற்றும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளில் கண்டிருப்பீர்கள்.

'நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆப் மெடிசின்' வெளியிட்ட ஆராய்ச்சிப்படி, 'Influenza' என்ற சளி காச்சல் வந்து விட்டால் நெஞ்சிலும், மூக்கிலும் எரிச்சலை உண்டாக்கும், பின்பு உடல் வீக்கமும் ஏற்பட்டு, எரிச்சலை ஏற்படுத்தும். அதனை உடனே சரி செய்யாவிட்டால் ரத்த ஓட்ட நாளங்களில் அடைப்பினை ஏற்படுத்தி இதயத்தினை பாதிக்கும் என்று கூறுகிறது.

வாஷிங்டனில் உள்ள 'Sola Med Solution' தலைமை நிர்வாகி 'சரளயன் மார்க்', 'சாதாரண குளிரில் நடந்தால் நோய் பரவாது, ஆனால் தொடர்ந்து குளிரில் இருந்தால் சளி சவ்வு காய்ந்து அதன் மூலம் கிருமிகள் நுழையும்' என்று எச்சரிக்கின்றார். ஆகவே ஏசி வெயில் காலத்தில் நல்லது, இதமானது தான் ஆனால் குளிர் காலத்தில் அதனை உபயோகிப்பதால் கிருமியின் தொற்றால் அவதிப் பட வேண்டுமாம்.

சிறியவர் முதல் பெரியவர் வரை ஏதோ சிந்தனையில் அல்லது படிக்கும்போதோ, அல்லது எழுதும்போதோ நகத்தினை கடிப்பதினை பார்த்திருப்போம். அந்த நகம் தான் கிருமிகளை தங்கிச் செல்லும் கப்பலாக பயன் படுகிறது என்று பலருக்குத் தெரியாது. குழந்தைகள் பல மூக்கினுள் கைவிட்டு பின்பு வாயில் வைத்து சுவைப்பதினையும், ஏன் பெரியவர் சிலர் வேலையில்லா நேரத்தில் புத்தகங்கள் படிப்பதினை விட்டு,விட்டு மூக்கினுள் உள்ள முடிகளை பிடுங்கும் பழக்கத்தினையும் கொண்டுள்ளனர். ஆனால் அந்த மயிர்கள் தான் வெளியில் உள்ள தூசி மூக்குக்குள் செல்லாமல் தடுக்கின்றது என்று அவர்களுக்குப் புரியாது. அப்படி செய்பவர்களை நோய் கிருமிகள் எளிதாக பற்றிக் கொள்கின்றன.

2019 ம் ஆண்டு வெளியிடப் பட்ட 'the journal of exprimental medicine' அறிக்கையில் உடலுக்கு ஓய்வு கொடுத்து அதிக நேரம் தூங்கினால் T-Cell என்ற நோய் எதிர்ப்பு சக்தியினை கொடுக்குமாம். நீங்கள் நோயுள்ள சிலர் வெகு நேரம் தூக்கம் வராமல் அவதிப் படுபவர் குணமாக்குவது நெடுநாள் ஆகுமென்பதையும், அதிக நேரம் தூங்குபவர் சீக்கிரமே குணமாய்வதினையும் காணலாம். நான் மதுரையில் 1982 ம் ஆண்டு டி.எஸ்.பியாக பணியாற்றிய போது எனது 10 மாத மகனுக்கு காய்ச்சல் வந்து விட்டது என்று எனது மனைவி கீழ வெளி வீதியில் உள்ள டாக்டர் திருஞானம் என்பரிடம் காட்ட எடுத்துச் சென்றார். அந்த டாக்டர் மருந்து கொடுத்து விட்டு குளிர்ந்த நீரில் குளிக்க வையுங்கள் என்று கூறினாராம். அதற்கு என் மனைவி ஏன் டாக்டர் குழந்தை காய்ச்சல் என்றால் நீங்கள் குளிர் நீரில் குளிக்க வையுங்கள் என்று கூறுகின்றீர்களே என்று கேட்டதிற்கு நான் டாக்டரா நீங்கள் டாக்டரா என்று சொல்லி அனுப்பி விட்டாராரம். இதனையே தான் பாட்டிமார்களும் தங்கள் பேரக் குழந்தைகளுக்குச் செயகின்றார்கள். குழந்தைகள் ஆராய்ச்சி மைய ஆராய்ச்சி நிபுணர் Whitley-William கூறும்போது, 'குழந்தைக்கு ஜுரம் வந்தால் குளிரான நீரில் குளிக்க வைக்கக் கூடாது. மாறாக மிதமான நீரில் தான் குளிக்க வைக்க வேண்டும் என்று சொல்கின்றார். நீங்கள் நோயுற்றிருந்தால் புகை பிடிக்கவோ அல்லது புகைப்பவர் அருகிலோ இருப்பதனை தவிர்க்கவும். ஏனென்றால் புகைப்பவர் நுரையீரலை சீக்கிரமே கிருமிகள் தாக்குகின்றனவாம்.

வைட்டமின் 'D' என்ற ஊட்டச்சத்து மனிதனுக்கு மிக முக்கியமான நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கின்றது. அவை பால், முட்டை, மீன்களில் உள்ளது. சூரிய ஒளியிலியிலும் உள்ளதாக அறிவோம். அதனையே 'Nutrient' என்ற பத்திரிக்கையில் கூறப் பட்ட குறிப்பில் சொல்லப் பட்டுள்ளது. அதுவும் அதிகாலை சூரியன் உதயமாகும் நேரம் மற்றும் மாலை அந்தி மயங்கும் நேரம் ஓசோன் என்ற ஊட்டச் சத்து அதிகமாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

சில நாடுகளில், மற்றும் சில மாநிலங்களிலும் முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அப்படி அணிவதால் நோய் பரவுவதை அறவே தடுக்க முடியாது. மாறாக அந்த நோய் வேகமாக பரவுவதை தடுக்கமுடியும் என்று CDC Dr. Horovitz கூறுகின்றார். உங்கள் கால்களில் பெருவிரல்களில் வீக்கம் வந்தாலும், விரல்களில் குளிர்ந்த நீர்பட்டால் அரிப்பு எடுக்கின்றது என்றால் அது கொரானாவிற்கான அறிகுறி என்று Dr.Mathew G Heinz, MD,, Tuscon Medical Centre, Arizona மாநிலத்தில் பணியாற்றுபவர் கூறுகின்றார்.

கொரானா வந்தால் சுவையினை இழக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று Dr Heniz கூறுகின்றார். அதுவும் இளைஞர்களுக்கு அதிகமாக தென்படும். ஹரியானா மொஹாலியில் உள்ள நேஷனல் விவசாய மற்றும் உணவு மருத்துவதிற்கான முதுகலை பட்டப் படிப்பு மையம் கூறுகையில் தைல(peppermint) அல்லது தேங்காய் எண்ணெய் போன்றவற்றினை நுகரும் சக்தியினை இழக்கும் தன்மை கொண்டதாக அமையும்.

‘Annals of Nurology’ என்ற விஞ்ஞான புத்தகத்தில் கொரானாவால் பாதிக்கப் பட்டு மருத்துவனையில் சிகிச்சை பெற்றும் வரும் நோயாளிகளின் மூலைகளின் நரம்பு மண்டலத்தினை பாதிப்பு ஏற்பட்டு தலைவலி, தலை சுற்றல், மயக்கம், வலிப்புத்தன்மை மற்றும் சிலருக்கு இதய நோய் போன்றவற்றால் பாதிக்கப் படவும் வாய்ப்புள்ளதாக கூறப் பட்டுள்ளது. முதுமையில் வருகின்ற 'alzheimer' மறதி மூலம் வடிக்கும் வானி என்ற உமிழ் நீரால் அல்லது பெண்கள் பிறப்புறுப்பின் வெளிப்பக்கம் ஏற்படும் கட்டிகள் உடைந்து 'HSV-!' என்ற ஹெர்பெஸ் சிம்ப்ளெக்ஸ் வைரஸ் வெளியேறுவதால் மிகவும் ஆபத்தானதும், சீக்கிரம் பரவக்கூடியதாகும் என்று தைவான் நாட்டு ஆராய்ச்சிக் குறிப்பு கூறுகின்றது. அதனை கண்டு பிடித்து சரியான மருந்து எடுத்துக்கொண்டால் 90 சதவீதம் குணமாக் கிவிடலாம் என்றும் கூறுகின்றது.

கொரானா வைரஸ் பிளாஸ்டிக், உலோக பொருட்களில் 2-3 நாட்களுக்கும், பேப்பர்-அட்டைகளிலும் 24 நேரத்திக்கு இருக்கும், என்று 'New England Journal of Medicine' என்ற பத்திரிக்கைக் குறிப்பு கூறுகின்றது., வைரஸ் தொலைபேசி, கைப்பிடி, ரிமோட், கம்ப்யூட்டர் கி போர்டு, குழாய்கள், கதவு, மின் இயக்கி கைப்பிடிகள், பொது இடங்களில் உள்ள பெட் சீட், போர்வை, தலையணை, ATM, பெட்ரோல்பம்ப் ஹாண்டில், ஜிம்மில் உள்ள சாதனங்கள், பாத்திரங்கள் போன்றவற்றில் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து இருக்கும். ஆகவே தான் sanitizer வைத்து சுத்தம் செய்யவும், பாத்திரங்களை சூடு தண்ணீரில் கழுகவும் அறிவுரை சொல்லப் படுகிறது. செலியாக்(Celiac) என்ற ஒவ்வாமை நோய் வயிற்றுப் போக்கு, வயிற்று பொருமல் போன்றவை போன்றவை நோய்களினை எதிர்க்கும் திறனை எதிர்கொண்டுள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம் என 'Celiac Virus Foundation' செய்தி குறிப்பு சொல்கிறது. தசை பிடிப்பு மற்றும் முதுகு வலி போன்றவையும் அதனுடைய அறிகுறியாகுமாம்.

EVD எபோலா Zika வைரஸ் நோய்கள் ஆப்பிரிக்க நாடுகளான கினியா, காங்கோ போன்ற நாடுகளில் முதலில் கொசு கடியினால் மிருகங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தி பின்பு மனிதர்களிடம் பரவி அதனால் 50 சதவீதம் பேர் இறந்துள்ளதாக செய்தி குறிப்பு கூறுகிறது. ஆ ண்கள் உடல் உறவு கொள்ளும்போது வெளியாகும் விந்துக்களால் பெண்களுக்கும் பரவுதாம். அதன் பிறகு பெண்களால் தொற்று ஏற்படுகின்றது என்றும் சொல்லப் பட்டுள்ளது. அதன் அறிகுறிகள் காய்ச்சல், களைப்பு, தலைவலி, தொண்டை வறண்டு போதல், வயிற்று போக்கு போன்றவையாகும். மேற்பாதித்த 28,616எபோலா மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா பாதித்த 28,616பேரில் 11,310 இறந்து விட்டனர் என்று கூறப் படுகின்றது.

Rabbies என்ற சொறி நாயால் கடிபட்டவர் அல்லது அதன் நாவில் வடியும் நீரின் தொடர்பு கொண்டவர் உடனே ஊசி போட்டுக் கொள்ளவேண்டும். நான்கு மாதத்திற்குள் போட்டுக் கொள்ளாவிட்டால் அவருக்கு காய்ச்சல், தலைவலி, தூக்கமின்மை, மயக்கத்தினால் அவதிப் படுவர்.

Meningitis என்ற மூளை காய்ச்சல் நோய் எப்படி அறிந்து கொள்வதென்றால், பாதிக்கப் பட்ட நபர் தனது தாடையினை நெஞ்சை நோக்கி கீழே கொண்டு வந்தால் முடியாது. அத்துடன் தூக்கமின்ம, குளிர் காய்ச்சல் வந்தது போல நடுக்கம், இதய துடிப்பு அதிகமாகுதல், முதுகு பிடிப்பு போன்றவை ஏற்படும். உடனே டாக்டரை அணுக வேண்டும். பெரும்பாலும், பால் கொடுக்கும் பெண்கள், சிறுவர் இருமல், தும்மல், காய்ச்சல் உள்ளவர்கள் அருகில் இருந்தால் அதன் ஈர்ப்பால் முதுகு தண்டின் நீரில் கிருமி தொடர்பு ஏற்பட்டு மூளை காய்ச்சல் வருமாம். உடனே டாக்டரை அணுக வேண்டும்.

தோலின் மேல் பகுதியில் ஏற்படும் பாலுண்ணிகள் இதுவரை தேரைகள் மூலம் ஏற்படுகிறது என்று எண்ணிக் கொண்டுள்ளோம். ஆனால் popiloma virus என்ற புற்று நோயால் ஏற்படுகிறதாம். அவைகள் பெண்களின் கருப்பை வாய் புற்று நோய், யோனி புற்று நோய், ஆண் மற்றும் பெண் குறிகளின் மேல் பகுதியில் ஏற்படும் புற்று நோயாகுமாம். அவை 30-40 சதவீதம் பாலுறவு மூலமே உண்டாகிறது என்றும் கூறப் படுகிறது.

நோய்கள் வந்தால் உடனே ஆண்டிபயோடிக்ட்ஸ் ஊசி போட்டுக் கொள்ளாதீர்கள். அவை உடலில் உள்ள நுண்ணுயிர்களை அழித்து விடும். Bactria என்ற நுண்ணுயிர் தான் virus என்ற கிருமிகளை அளிக்கக்கூடியது என்று 'Royal Society of Medicine' ஆய்வு குறிப்பு கூறுகிறது. நோய்கள் வந்து விட்டால் ஒவ்வொரு காரியமும் முடிந்த பின்பு சோப்பு தண்ணீரில் 20 நொடிகள் நன்றாக கழுவ வேண்டும். அதன் பிறகு சுத்தமான துணியால் துடைத்து விட வேண்டுமாம். அப்போது தான் பிறருக்கு பரவாமல் தடுக்க முடியும் என்றும் சொல்கிறது.

Flu, Corona தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது அவசியம், ஆனால் அது எப்போது வரும் என்று கூற முடியாது. Remdesivir மிகவும் நம்பிக்கைக்கு பாத்திரமான ஊசி அதனை அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று அமெரிக்கா அதிபர் சொன்னார். ஆனால் பரிசோதனையில் அது பக்க விளைவு ஏற்படுத்தி விட்டதால் அதன் உற்பத்தி நிறுத்தப் பட்டது. தற்போது Pfizer, Covin-net நிறுவனங்கள் தாங்கள் ஊசி கண்டு பிடித்து விட்டதாகவும் அதனை உலக சுகாதார மையம் அங்கீகரிக்க முயற்சிகள் எடுத்துக் கொண்டுள்ளோம் என்றும் கூறுகின்றன. ஆனால் நோய்க்கான மருந்து அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் தான் உபயோகத்தில் வர வாய்ப்புள்ளதாக கூறுகின்றார். ஏனென்றால் அந்த மையம் உயிர்களை பலி கொடுப்பதினை விட பாதுகாப்பதுதான் தங்கள் தலையாய கடமை என்றும் கூறுகின்றது. Corona pandemic முதல், இரண்டு என்று தற்போது மூன்றாம் நிலைக்கு வந்துள்ளது என்றும் கூறப்பது. அதில் உண்மை இருப்பதுபோல அமெரிக்காவில் தினமும் 2 லட்சமும் டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வருவதால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுகோள் விடப் பட்டுள்ளது.

கூடியமான வரை கூட்டம் நெருக்கமான இடங்களை தவிர்க்கவும், முக கவசம் அணியவும், சமூக இடைவெளியில் இருக்கவும், பரந்த வெளிப் பரப்பில், பூங்காவில் நடப்பதும், மூச்சிப் பயிற்சி செய்யவும், கைகளை சுத்தமாக கழுவுவதும் அவசியம் என்னும் கூறப் படுகிறது. பால் போடாத கிரீன் டீ, காய்கறி சூப்பு மற்றும் ஆட்டு கால் மற்றும் எழும்பு சூப்பு போட்டு குடிக்கவும் சொல்லப் படுகிறது. நாம் winter என்ற குளிர் காலத்தில் இருப்பதினால் சளி நோய் வராமல் காத்துக் கொண்டால் நம்மையும், நம்மை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றிக் கொள்ளலாமா?

Tags: கட்டுரை

Share this