Breaking News

மௌலானா தளபதிக்கு லால்பேட்டை துபாய் ஜமாத் புகழாரம் !

நிர்வாகி
0
அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)

புகழ் அனைத்தும் ஏக இறைவன் ஒருவனுக்கே..!

நேர்மைக்குத் தலைமகனாய் அரசியலில் நெடும்பயணம் செல்பவர்க்கு சிறப்பு வாழ்த்து ஒன்றை சங்கை மிகு லால்பேட்டை துபாய் ஜமாத் மூலம் உங்கள் மீது அன்பு கொண்ட நெஞ்சங்களில் அழகாய் பூத்த மலர்களை கொண்டு வாழ்த்துப் பாக்களை அரேபிய கடற்கரை காற்றில் அழகாய் நாங்கள் அள்ளித் தெளிக்கிறோம் உங்கள் வசம் வந்து சேரும் வல்லோனின் கிருபை கொண்டு.

லால்பேட்டை எனும் தீனின் கோட்டை தனில் சரித்திர யரிக்கை தந்த சமர்க்கள வேங்கை எங்கள் அன்புத் தளபதி..!

ஊரின் வரலாற்றை விரல் நுனியில் வைத்திருப்பவர் அதனால்தான் எங்கள் ஊரின் அரசியல் வரலாறு இவரை இதயத்துக்குள் வைத்துக்கொண்டது. அரசியலில் யாரேனும் இலக்கணம் படிக்க ஆசைப்பட்டால் இவரிடம் படித்துக்கொள்ளலாம். இவர்கள் போல சிலரிடமிருந்து தான் இலக்கணம் நமக்காகப் புத்தகமாக எழுதப்பட்டது...!

இவர் ஒரு நாளைக்குப் பேசும் நூறு வார்த்தைகளில் ஒரு வார்த்தையிலாவது காயிதே மில்லத் இருப்பார். சுவாசிப்பதையும் தலைவரை நேசிப்பதையும் ஒரே நேரத்தில் இவரால் மட்டுமே செய்ய முடியும்.

லீக் இவரது இயக்கம்

காயிதே மில்லத் இவரது தலைவர்

ஏழிலிருந்து...

எழுபது வரை மட்டுமல்ல...

இன்னும்.. இன்னும்..!

எத்தனை வயதானாலும்

அவர் கையில் பிறைக்கொடியை..!

அவர் சபை தாய்ச்சபையை..!

அவர் தலைவர் காயிதே மில்லத்தே..!

தளபதி என்ற பட்டத்திற்குத்

தமிழகத்தில் முதல் சொந்தக்காரர்

லீக்கிற்க்கும் தளபதி

எங்கள் லால்பேட்டைக்கும் தளபதி..!

உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் அதற்கு ஒரே காரணம் உங்களுக்கு எல்லோரையும் பிடிக்கும்!

பொதுவாழ்வில் மணி விழா காணும் காயிதேமில்லத் கண்டெடுத்த மௌலானா அல் ஹாஜி தளபதி ஏ.ஷபீகுர்ரஹ்மான் மன்பஈ சிறப்பு மலர் வெளியீட்டு விழா லால்பேட்டை நகர முஸ்லிம் லீக் ஏற்பாட்டில் தாருஸ் ஸலாம் பதிப்பகம் சார்பில் நவம்பர் 7 வரும் சனிக்கிழமை அன்று நடைபெறுவது ,

பேரன்பும் பெருமகிழ்ச்சியும் கொள்வதோடு அவர் நீண்ட ஆயுள் பெற்று நோய் நொடியற்றா வாழ்வோடு மக்கள் பணியில் தொடர்ந்து தொண்டாற்ற ஏக இறைவனை பிரார்த்திக்கிறோம்

இங்ஙனம்்

லால்பேட்டை துபாய் ஜமாத்

Tags: லால்பேட்டை

Share this