Breaking News

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு நடைப்பெற்றது!

நிர்வாகி
0

லால்பேட்டை நகர இ.யூ.முஸ்லிம் லீக் பொதுக்குழு கூட்டம் ரஹ்மானியா வீதி மஹதியா மன்ஜிலில் 19/11/2020 அன்று நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.

நகர துணைத் தலைவர் மெளலவி ஜியாவுத்தீன் பாகவி திருக்குர்ஆன் வசனம் ஓதினார்.

நகரச் செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிஃப் வரவேற்று பேசினார். மாநில துணைத் தலைவர் தளபதி ஷபீகுர் ரஹ்மான், மாவட்ட துணைச் செயலாளர் தாஜுத்தீன்,நகர துணைத் தலைவர்கள் எஸ்.முஹம்மது ஹாமீது, கே.எஸ்.சபியுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நகர பொருளாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். கூட்டத்தில் கீழ்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இ.யூ முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் அவர்களின் ஆணைக்கினங்க தி.மு.க தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட அயராது பாடுபடுவது.

சிதம்பரம் சட்டமன்ற தொகுதியை இ.யூ. முஸ்லிம் லீக் கேட்டு பெற்று லால்பேட்டை மெளலவி ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் வேட்பாளராக அறிவிக்க முஸ்லிம் லீக் தலைமையை கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இ.யூ.முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த தலைவர்களுக்கும், கூட்டணி கட்சியினர்களுக்கும், மாநில,மாவட்ட, நகர நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. லால்பேட்டை நகரில் இ.யூ.முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்துவது. லால்பேட்டை பேரூராட்சி 15 வார்டுகளுக்கும் கமிட்டி அமைப்பை வலுப்படுத்துவது.

லால்பேட்டையில் உள்ள சாலைகளில் ரோடு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எம்.அனீசுர் ரஹ்மான்,நகர துணைச் செயலாளர் அமானுல்லாஹ், டி.அபுசுஹுது,நகர இளைஞர் அணி தலைவர் மெளலவி மஹபூப் அலி ரப்பானி ஆகியோர் தீர்மானத்தை வழிமொழிந்து பேசினர்.

நகர முன்னோடிகள் எம்.சித்தீக், முஹிபுல்லா, நாசர், கலீமுல்லா, நூருல்லா, எஸ்.ஏ.அபுசுஹூத், மெளலவி தெளபீக், இளைஞரணி செயலாளர் சிராஜுத்தீன்,மாவட்ட பொருளாளர் முபாரக், தொழிலாளர் அணி ஹஸன்,மாணவர் அணி தலைவர் அஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர். நகர துணைத் தலைவர் ஏ.ஜெ.முஹம்மது ஹிலூர் நன்றி கூறினார். மெளலவி தௌபீக் துஆ ஓதினார்.

Tags: லால்பேட்டை

Share this