ரத்து செய்யப்பட்ட டிசம்பர் 6 ஆர்பாட்டம்..
பாபர் மசூதி இடிப்பை கண்டிக்கும் வகையில் சிதம்பரத்தில் தமுமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்பாட்டம், கடந்த சில நாட்களாக கடலூர் மாவட்டம் வெள்ளத்தில் மிதந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து தமுமுக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி நிவாரண பணிகளில் தமுமுகவின் தொண்டர்கள் பரவலாக ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் பேரிடர் மீட்புப் படையினருக்கும் லால்பேட்டை தமுமுகவின் தொண்டர்கள் உணவு வழங்கினர்.
காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை ஒன்றியங்கள் மற்றும் பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, காட்டுமன்னார்கோவில் பேரூராட்சி மற்றும் சிதம்பரம் நகராட்சி ஆகிய இடங்களில் தமுமுகவின் தொண்டர்கள் களத்தில் உள்ளனர்.
லால்பேட்டை , எள்ளேரி, ஆயங்குடி தமுமுகவின் அலுவலகங்கள் நிவாரண பணிகள் முகாமாக பணியாற்றி வருகின்றன. நன்றி :- வாசகன் ரிஃபாயி
Tags: சமுதாய செய்திகள்