தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவுக்கு லால்பேட்டை இ.யூ. முஸ்லிம் லீக் சார்பில் கோரிக்கை
பெறுதல்:
திரு.டி.ஆர்.பாலு எம்.பி அவர்கள்
(தி.மு.க தேர்தல் அறிக்கை குழு ஒருங்கினைப்பாளர்)
அன்புடையீர் வாழ்த்துக்கள்!
தி.மு.க தலைவர் தளபதியார் அவர்களின் தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமைந்திட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரச்சார பணிகளை தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் உத்தரவிற்க்கிணங்க துவங்கியுள்ளோம்.
தி.மு.க வின் 2021 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் எங்கள் ஊர் லால்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் வெற்றிலைக் கொடிக்கால் விவசாயம் அதிகப்படியாக இருப்பதால் வீரணம் ஏரி மதகில் இருந்து வரும் தண்ணீர் பாசனத்திற்க்கு கடைமடை வரை சேருவதில்லை. அதற்கு பாசன வாய்க்கால்களை வீராணம் மதகில் இருந்து கடைமடை வரை தூர் வாரி, தண்ணீர் திறந்து விட வேண்டும்.
லால்பேட்டை பேரூராட்சி பகுதி மக்களின் தேவைக்காக நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும்.
வீராணம் ஏரியினை சுற்றுலாத் தளமாக அமைத்திட வேண்டும்.
இந்த கோறிக்கைகளை தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெறச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் லால்பேட்டை - பேரூராட்சி கடலூர் தெற்கு மாவட்டம்.
Tags: லால்பேட்டை