குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூன்றாம் நிகழ்வு
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் நடத்தப்படட்டு வரும் குழந்தைகள் நலம் காப்போம் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் மூன்றாம் நிகழ்வு இன்று 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை மகரிப் தொழுகைக்கு பிறகு லால்பேட்டை புதுப் பள்ளிவாசல் பெண்கள் மத்ரஸா மண்டபத்தில் பள்ளியின் முத்தவல்லி அல்ஹாஜ் A.M. முஹம்மது ஜாஃபர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மவ்லானா மவ்லவி S. முஹம்மது அலி மன்பயீ, ஹள்ரத், அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்
பள்ளியின் இமாம்கள் மவ்லவி ரில்வானுல்லாஹ் மன்பயீ அவர்கள் கிராஅத் ஓதினார்கள் மவ்லவி, ஹாபிழ் S.A. முஹம்மது முஹ்சீன் ஹஸனி அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்கள் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் பேராசிரியர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் காரி A.Z முஹம்மது அஹமது ஹள்ரத் அவர்கள் துஆ ஓதினார்கள்
இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர்கள் லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகள், ஆலிம் பெருமக்கள், ஜமாஅத் நிர்வாகிகள், பொதுமக்கள், மக்தப் மாணவர்கள் , மற்றும் பெரும் திரளாக பெண்கள் கலந்துக் கொண்டனர்
Tags: லால்பேட்டை