லால்பேட்டையின் முதல் காவலர் அப்துல் ஹமீது!
லால்பேட்டை நகரில் பலநூறு இளைஞர்கள் உள்ளனர். படித்த இந்த இளைஞர்கள் அரசு வேலை வாயப்புகளில் சேர்ந்தால் ஊர் வளர்ச்சியடையும். அத்துடன் சமூகம் பல பிரச்னைகளிலிருந்து விடுபடும். மேலும் நமது உரிமையான 3.5 சதவீத இட ஒதுக்கீடும் நிறைவு பெறும். இந்த கவலை நமது மக்களிடம் நிறையவே உள்ளது. இதற்கான முன்னெடுப்பு முயற்சிகளை ஏராளமாக செய்துள்ளனர் . கடந்த வருடம் லால்பேட்டையில் காவலர் தேர்விற்கான பயிற்சி முகாம் தமுமுக சார்பில் நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற இளைஞர்கள் பலர்
தொடர்ந்து விலகிவிட்ட போதும் ஒரே ஒரு இளைஞர் மட்டும் கடைசிவரை நின்று வெற்றிவாகைச் சூடி, பயிற்சி முடித்து அரசு வேலைவாய்ப்பில் சேர்ந்து நகரின் முதல் " போலீஸ் " ஆக உருவாகியுள்ளார்.
முதல்நிலைக் காவலர் அப்துல் ஹமீது அவர்களுக்கு இன்று நகர தமுமுக அலுவலகத்தில் பாராட்டு நடத்தப்பட்டு, பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசாக புத்தகம் வழங்கி கவ்ரவிக்கப்பட்டது.
Tags: லால்பேட்டை