கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் புதிய நிர்வாகிகள் தேர்வு
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு இன்று 19.01.2021 செவ்வாய் கிழமை காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைபெற்றது.
தலைவராக தொடர்ந்து நான்காவது முறையாக மூத்த மார்க்க அறிஞர் விருத்தாசலம் மௌலானா சஃபிய்யுல்லாஹ் ஃபாஜில் மன்பயீ அவர்களும், செயலாளராக சிதம்பரத்தைச் சேர்ந்த இளம் ஆலிம் மௌலானா முஹம்மது ஷிப்லீ ரஹ்மானி அவர்களும், பொருளாராக லால்பேட்டையைச் சேர்ந்த மௌலானா முஹம்மது அஸ்அத் உலவீ ஃபாஜில் மன்பயீ அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். மாவட்டம் முழுவதிலுமிருந்தும் முன்னூறுக்கும் மேற்பட்ட உலமாக்கள் சங்கமித்திருந்தனர் .
சமுதாயத்தின் அங்கீகரிக்கப்பட்ட மார்க்க அறிஞர்களின் சபையான ஜமாஅத்துல் உலமா சபையின் கடலூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பணி சிறக்க லால்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையதளம் வாழ்த்துகிறது .
Tags: சமுதாய செய்திகள்