லால்பேட்டையில் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உற்சாக வரவேற்ப்பு.!
கடலூர் மாவட்டம் (தெற்கு) காங்கிரஸ் கமிட்டியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு 5பேர் புதிதாக நியமனம் செய்யப்பட்டனர். அதனையொட்டி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் கே.ஐ.மணிரத்தினம் மாநில துணைத்தலைவராகவும்,பி.பி.கே. சித்தார்த்தன் மாநில செயலாளராகவும், திருமுட்டம் என்.வி.செந்தில் நாதன் மாவட்ட தலைவராகவும்,புவனகிரி சேரன் முட்லூர் ஜெயச்சந்திரன் ஆகியோர் மாநிலபொதுச்செயலாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக லால்பேட்டை வருகைதந்தபோது,பேருந்து நிலையம் ஜித்தாடிராவல்ஸ் அருகில் அனைவருக்கும் உற்சாக வரவேற்ப்பு அளிக்கப்பட்டது.
மாவட்ட துணைத்தலைவர் நஜீர் அஹமது புதிய மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்திவரவேற்றார். வரவேற்ப்பு நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் தவர்த்தாம் பட்டு விஸ்வநாதன்,நகர தலைவர் இதயத்துல்லா மாவட்ட பொதுச்செயலாளர் ஜின்னா,முஹம்மதுபஷீர், முன்னாள் நகரதலைவர் நியமத்துல்லா,ஊர்பிரமுகர்கள் அனீசுற்றஹ்மான்,அமானுல்லா, ஹாஜி முஹம்மது சபீர்,அத்தாவுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை