Breaking News

கோபம் கொள்ளலாகுமா பாப்பா ! (டாக்டர் ஏ.பீ. முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

நிர்வாகி
0
'

கோபம் கொள்ளாதே பாப்பா' என்று நமது பெரியோர் குழந்தைகளுக்கு பாட்டு படிப்பர். தேர்தல் தோல்வியினை ஒத்துக் கொள்ளாமல் குப்பற விழுந்தாலும் மீசையில் மண் ஓட்ட வில்லை என்று அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது ஆதரவாளர்களைப் பார்த்து ஜோ பிடென் வெற்றி பெற்றது போலியானது ஆகவே ஜோ பிடேன் வெற்றியினை உறுதி செய்ய 7.1.2021ல் கூடிய அமெரிக்க பாராளுமன்ற கட்டிடமான 'capital' நோக்கி படை எடுங்கள் என்ற சொன்ன கோபமான வார்த்தைகளால், அவருடைய ஆதரவாளர்கள் பாராளுமன்றத்தின் உள்ளே நுழைந்து சூறையாடியதால், பாராளுமன்ற உறுப்பினர்களே பதுங்கு குழியில் ஓடி ஒழிந்தது அனைத்துலக தொலைக் காட்சி நிறுவனங்களும் படம் பிடித்துக் காட்டியது நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். பாராளுமன்றத்தில் ட்ரம்பிற்கு எதிராக உரிமை பிரட்சனை தீர்மானம் கொண்டு வந்தபோது அவர் சார்ந்த குடியரசு கட்சியினரே அவருக்கு எதிராக ஓட்டளித்தார்கள் என்பது ஒரு நவீன வரலாறுவல்லவா?

அடக்க முடியா கோபத்தினை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வோமேயானால் ரத்த அழுத்தமும், இதய நோயும் நம்மை அண்டாமல் வைத்துக் கொள்வதோடு, உற்றார், உறவினர், நண்பர்கள், சக ஊழியர்கள் ஆகியோரை பகைத்துக் கொள்ளாமல் அன்பு, பாசம், பரிவு குறைவில்லாமல் வாழ முடியும்.

சிலர் எதெற்கெடுத்தாலும் கோபப்படுவர். நீங்கள் வாகனங்களில் செல்லும்போது குறுக்கே கட்டை வண்டியோ, சைக்கிள் ரிக்கஷாவோ, ஆட்டோ ரிக்சாவோ, குறுக்கே வந்தால் கோபமான வார்த்தைகளை அள்ளி வீசுவீர்கள். பக்கத்து வீட்டு குப்பை உங்கள் வீட்டு முன் போட்டால் அல்லது வளர்ப்பு நாய் சத்தம் போட்டால், அல்லது தெரு நாய் கூட இரவில் ஊளை இட்டால் கோபப் படுவீர்கள், வீட்டு சிறார்கள் சந்தோசத்தில் சப்தம் எழுப்பினால் கூட கோபப் படுவீர்கள். அதனால் உங்கள் மனதினையும், உடலையும், உறவினையும் கூட பாதிக்கும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

கனடாவினைச் சார்ந்த மனோதத்துவ நிபுணர் Calgery (கல்கெரி), 'பெரும்பாலானவர்கள் கோபத்தினை கட்டுப் படுத்த வேண்டும் என்று நினைக்கின்றார்கள். கோபம் சில விஷயங்களை கவனிக்கத் தூண்டுகிறது' என்கிறார்.நாம் அந்த விஷயத்தினை கவனித்து தீர்வு காண்போமோயானால் நமக்கு நல்லதாக அமையும்' என்றும் கூறுகிறார்.

துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலோனோர் நமது உணர்வுகளை கட்டுப் படுத்த முயற்சி செய்கிறோம் அவ்வாறு செய்வது நமது உடல் சுகாதாரத்தினை பல நாட்கள் சென்று பாதிக்கின்றது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். நியூயார்க் நகர் ரோசெஸ்டர் பல்கலைக் கழகம் (University of Rochester) ஆராய்ச்சியாளர்கள்,'கோப உணர்வுகளை அடக்குபவர்கள் நீண்ட நாள் வாழவதில்லை என்கின்றனர். ' அவர்கள் புற்று நோயால் பாதிக்கப் படலாம்' என்றும் கூறுகின்றனர். நாம் கோபத்துடன் இருக்கும்போது மன அழுத்த ஹார்மோன்களான அட்ரினாலின்(adranaline) மற்றும் கார்டிசோல் (cortisol) வெளியேறி சக்கரை நோய், மன அழுத்தம், ஆட்டோ இம்யூன் (autoimmune) நிலைக்கு தள்ளப் படுகிறார்கள் என்றும் கூறுகின்றார்கள். 'அந்தக் கோபம் தலைக்கேறி , உங்கள் மனைவி, குழந்தைகள், குடும்பத்தினர், பணியாளர்கள் ஆகியோர்களுடனான உறவு எந்தளவிற்கு பாதிக்கும் என்று அளவிடமுடியாது' என்றும் ஆராய்ச்சியாளர் கீலன் (keelen) கூறுகின்றார். கனடாவின் Mc Master University (மெக் மாஸ்டர்) பல்கலைக் கழக ஆராய்ச்சியில், 'கோபக் கனல் வெளிப்படுத்துததால் இதய நோய்களின் துடிப்பு அதிகமாகும்' என்றும் கூறுகின்றன.

அது சரி மன அழுத்தம் சாமானியனைத் தான் பாதிக்கின்றதா, பிரபலங்களுக்கு வராதா என்றும் நீங்கள் கேட்கலாம். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லிங்கனைப் பற்றி குறிப்பிடும்போது அவருடைய குடும்பத்தினரால் மிகவும் கவலை கொண்டவராக இருந்துள்ளார் என்று அவருடைய நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் அவைகளையெல்லாம் அவர் கவலையாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அதேபோன்று தான் அமெரிக்க சிவில் உரிமை போராளி மார்ட்டின் லூதர் கிங் பற்றி 1968 Time Magazine profile கூறும்போது மார்ட்டின் லூதர் தன்னுடைய பாட்டி 13 வயதில் இறந்தபோதே தற்கொலை செய்து கொள்ள நினைத்தாராம். பிற்காலத்தில் கூட அவர் அடிக்கடி உணர்ச்சி வசப் படுவதினைப் பார்த்த நண்பர்கள் அவரை நல்ல psychiatrist இடம் சென்று காட்டும்படி அறிவுரை கூறினார்களாம்.

இங்கிலாந்து இளவரசியான டயானா பிரபலமான பின்பு மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்போன்று இருந்ததாக 1995ல் அவர் பி.பி.சி. செய்தி நிறுவனத்திற்கு பேட்டி கொடுத்தாததுபோல இருந்ததாம். அவர் சொந்த வாழ்க்கை சோகமாகி இங்கிலாந்து கோடீஸ்வரர் Dodi Payaad உடன் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு சென்று ஒரு ஹோட்டலுக்கு தங்கிவிட்டு காரில் ஒன்றாக புறப்பட்டபோது 31.8.1997 அன்று விபத்து ஏற்பட்டு மரணமடைந்தது அனைவருக்கும் தெரிந்த சோக கதையாகும். முதலாம் உலகப் போரின் நாயகன் என்று வர்ணிக்கப் பட்ட இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் எப்போது மன அழுத்தத்தில் இருந்தாரோ அப்போதெல்லாம் ஓவியம் வரைவது மூலமும், கடிதங்கள் எழுதுவது மூலமும் தனது கவனத்தினை திருப்பிக் கொண்டாராம்.

Gallop என்ற நிறுவனம் 143 உலக நாடுகளில் நடத்திய ஆய்வின்படி கோபம் குறைவாக கொள்ளும் நாடுகளாக Chad மற்றும் Niger நாடுகளை குறிப்பிடுகிறது. கோபம் அதிகமாக கொள்ளும் நாடாக உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதில் இந்திய நாடு 93 கோபம் உள்ள நாடாக உள்ளது. அதனால் தான் சமையல் கேஸ், பெட்ரோல், டீசல் என்ற அத்தியாயப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் அதிகமானாலும் எந்த வித ஆர்ப்பாட்டமும் நடப்பதில்லை என்பதிலிருந்தே உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஒரு மனிதனுக்கு கோபம் வருவது எதனால் என்று ஆராய வேண்டும். கோபம் குற்ற உணர்வு, மன அழுத்தம், ஏமாற்றம், வஞ்சகம், போன்றவை கோபத்தினை அதிமாக்கும் காரணிகளாக கருதப் படுகிறது. உதாரணத்திற்கு வேலைக்குச் செல்லும் மனைவி நேரத்திற்கு வீடு வந்து சேரவில்லை என்றால் வீணான சந்தேகங்கள், குழப்பங்கள் ஏற்படும், கடைக்குச் சென்ற மனைவியோ அல்லது கணவனோ வர நேரமானால் அவர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டு விட்டதா என்று மனம் படபடக்கச் செய்வதும் இயற்கையல்லவா?

தினந்தோறும் சந்திக்கும் சில நிகழ்ச்சிகளால் உங்கள் கோபம் கூடு கட்ட ஆரம்பிக்கும். உதாரணத்திற்கு அதிகாலையில் ஆவின் பால் பூத்தில் வண்டிக்காக வரிசையில் காத்திருக்கும்போது, அல்லது பஸ் ஸ்டாண்டில் வரிசையில் நிற்கும் போது, சினிமா அல்லது ஷாப்பிங் மாலில் காத்திருக்கும்போது இடையில் ஒருவர் புகுந்தால் உடனே அவருடன் சண்டை போடத் தூண்டும். அப்போது கோபத்தினை அடக்கிக் கொண்டு இவ்வளவு பேரும், இத்தனை நேரமும் காத்திருக்கின்றோம் நீங்கள் இடையில் செருகுவது எப்படி நியாயம் என்று அமைதியாக சொல்லுங்கள், மற்றவர்களும் உங்களுக்கு ஆதரவாக பேசுவதுடன், அவ்வாறு செய்தவர்களும் வருத்தமடைவார்கள். எப்படி 'வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகுமோ' அதேபோன்று கோபக் கனல் மறைந்து விடும்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலில் உள்ள University of California' வின் 'Brain imaging' மூலையின் செயல் பாடுகள் பற்றிய ஆராய்ச்சியில் 'நீங்கள் கோபத்தினை பேசி தீர்வு காண்பதால் மூளையின், 'amygdala' செயல்பாடுகள் அதிகரித்து adrenalino மற்றும் cortird என்ற ஹார்மோன்கள் சுரக்க செய்து கோப உணர்வுகளை கட்டுப் படுத்துகின்றது' என்று கூறுகின்றது. பிரிட்டிஷ் கொழும்பிய, Vancour மனோதத்துவ நிபுணர் Diana Mcintosh என்ற நிபுணர் 'நீங்கள் உங்கள் உணர்வுகளை வார்த்தைகளாக மாற்றும்போது உங்கள் தொடர்பு மற்றவர்களை இணைக்கின்றது, அத்துடன் மூச்சுப் பயிற்சியும், யோகாவும், இறை வணக்கமும் கூட கோபத்தினை கட்டுப் படுத்துகிறது' என்று சொல்லியுள்ளார். கோபம் வரும் நேரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதுதான், ஒரு அறைக்குச் சென்று அமைதியாக 5 நிமிடம் கண்ணை மூடி படுங்கள் பார்க்கலாம், உங்கள் கோபம் மறைந்து விடும்.

மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களை பிறர் முன்னிலையில் சுட்டிக் காட்டுவது, ஒட்டு மொத்தமாக ஒரு ஊரையோ அல்லது ஒரு குடும்பத்தையோ குறை சொல்லுவது நல்ல நட்புகளையும் கெடுத்து விடும் என்று மனோதத்துவ நிபுணர் பேட்ரிக் கீழன் கூறுகின்றார். நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் உங்கள் குறைகளை சுட்டிக் காட்டினால் அதற்காக கோபப் படுவதினை தவிர்த்து அதற்கு காரணம் என்ன என்று ஆராய்ந்து செயலாற்றினால் உங்கள் வாழ்க்கையில் முன்னேறலாம் அத்துடன் நல்ல உறவின் பாலத்தினையும் அமைத்துக் கொள்ளலாம். ஆகவே தான் கோபம் கொள்ளலாகாது பாப்பா என்று சிறு வயதிலேயே பாட்டி படுவது போல பாட்டினை எழுதியுள்ளது எவ்வளவு சாலச் சிறந்ததே என்று தெரியவில்லையா?

Tags: கட்டுரை

Share this