வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய Policies குறித்த விவாதங்கள் ..!
வாட்ஸ் அப் வெளியிட்டுள்ள புதிய Policies குறித்த விவாதங்கள் அதற்கு மாற்றாக வேறு சில செயலிகள் குறித்து பரிந்துரைகள் என சில நாள்களாக இணையத்தில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த விவாதங்களுக்குள் சென்று சிக்கிக் கொள்வதற்கு முன்.., அடிப்படையான ஒரு விஷயத்தை விளங்கிக் கொண்டால் இந்த புதிய ரகசிய கொள்கை பற்றி பெரிதாக யாரும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை.
இணையத்தில் உள்ள செயலிகளை நாம் உள் நுழைவதற்கு முன் அதன் Terms and conditions,privacy policies இத்யாதிகள் பக்கம் பக்கமாக குட்டி குட்டி எழுத்துக்களில் உள்ளிட்டவற்றை agree செய்ததன் பேரில் தான் பயன்படுத்த துவங்குகிறோம். ஆனால் அந்த குட்டி குட்டி எழுத்துக்களில் உள்ள ஆவணங்களை ஆற அமர படித்து விட்டு agree and continue என்று யாரும் செய்வதில்லை. இத்தகைய ஆவணங்களில் பெரும்பாலானவற்றில் அந்த செயலிகள் நம் கைபேசி அல்லது கணிணியை ஊடுறுவி தகவல்களை சேகரித்து கொள்ள முடியும் என்ற அனுமதியை நம்மை அறியாமலே வழங்கியதன் பேரில் தான் அவற்றை நம்மால் பயன்படுத்த முடிகிறது. தற்போது வாட்ஸ் அப் குறித்த தகவல்கள் பிரபலமாக விவாதிக்கப்படுவதால் இந்த ரகசிய காப்பு பற்றி அதிகம் பேசுகிறோம். வாட்ஸ் அப் மட்டுமல்லாமல் எல்லா செயலிகளும் இணையத்தில் பாதுகாப்பானவை அல்ல.
ரகசிய காப்பு பற்றி அக்கறை கொண்டால்... இந்த முகநூல் கூட நம்மால் பயன்படுத்த முடியாது என்பதே இணைய உலகில் யதார்த்தமான சமாச்சாரம் ஆகும்.
நன்றி - ரிஃபாயி
Tags: பயனுள்ள தகவல்