தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி
தமிழகத்திற்கு இதுவரை மொத்தம் 15 சட்டமன்ற பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்த ஆண்டு (2021) நடை பெற இருப்பது 16 சட்டமன்ற பொதுத் தேர்தல் ஆகும்.
டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் அட்டவணையை வெளியிடுகிறார். அதற்காக அவர் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்து வருகிறார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
பண்டிகைகளை கருத்தில் கொண்டு தேர்தல் தேதிகள் இறுதி செய்யப்பட்டுள்ளது; மாநிலத்தில் நடைபெறும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் கவனத்தில் கொள்ளப்பட்டன; அனைத்து வாக்கு சாவடிகளும் சானிட்டைசர், குடிநீர் உள்ளிட்டவை இருப்பது உறுதி செய்யப்படும்.
சட்டமன்றத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது; அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் இறுதியாக வெளியிடப்பட்ட அறிவிப்புகள், அரசாணைகள், பதிவுகள் குறித்த அறிக்கையை அனுப்பி வைக்கவும் தலைமைத் தேர்தல் ஆணையர் உத்தரவிட்டு உள்ளார்.
தமிழகம் சென்சிட்டிவ் என்பதால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன், பாலகிருஷ்ணன் என 2 பேரை நியமித்துள்ளோம்.
காவல்துறை பார்வையாளராக தர்மேந்திர குமார் நியமிக்கப்பட்டுள்ளார்!.
புதுவையில் தொகுதிக்கு ரூ. 22 லட்சம், தமிழகம் உள்பட பிற 4 மாநிலங்களில் தொகுதிக்கு ரூ. 30.8 லட்சம் வரை வேட்பாளர்கள் செலவு செய்து கொள்ள அனுமதி
தமிழகத்தில் தொகுதிக்கு ரூ. 30.8 லட்சம் வரை வேட்பாளர்கள் செலவு செய்து கொள்ள அனுமதி
தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.
புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்.
5 மாநில தேர்தலுக்கான முடிவுகள் மே 2ஆம் தேதி வெளியிடப்படும்.
Tags: செய்திகள்