Breaking News

லால்பேட்டை பேரூராட்சிக்கு தமுமுக, மமக கோரிக்கைகள்.!

நிர்வாகி
0

லால்பேட்டை தமுமுக மமக சார்பாக 04-02-2021 இன்று லால்பேட்டை பேரூராட்சிக்கு சென்று பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது.

கோரிக்கைகள்:-

1.லால்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களிலும் சுகாதாரக் கேடு விளைவிக்க கூடிய அளவிற்கு குப்பை மேடுகளாக காட்சி அளிப்பதால் தூய்மை பணியாளர்களை அதிகப்படுத்தி லால்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களிலும் தினமும் குப்பைகளை அள்ளி தூய்மை படுத்த வேண்டும்.

2.லால்பேட்டையில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் உள்ள பழைய TUBE லைட்டுகளை அகற்றிவிட்டு அனைத்து மின் கம்பங்களிளும் LED விளக்குகளை பொறுத்த வேண்டும்.

3.லால்பேட்டை பேரூராட்சியில் பணிபுரியக்கூடியவர்கள் ஒரு சிலரை தவிர மீதம் உள்ளவர்கள் ஒப்பந்த தொழிலாளராகவே உள்ளனர் பணியாளர்களை அதிகப்படுத்தி லால்பேட்டை பேரூராட்சிக்கு எத்தனை பணியாளர்கள் தேவையே அதை கணக்கிட்டு அவர்களை நிரந்தரப்பணியாளர்களாக பணியில் அமர்த்த வேண்டும் .

4.லால்பேட்டையில் உள்ள தெருக்களில் பழுதடைந்த சாலைகளை புதிய சாலை அமைத்து தர வேண்டும் .

5.லால்பேட்டையில் உள்ள அனைத்து தெருக்களிலும் கொசுக்கள் அதிகமாக உள்ளதால் வாரம் ஒருமுறை கொசு மருந்து அடிக்க வேண்டும் என்றும் இன்னும் பல கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

இதில் மாநில,மாவட்ட,நகர நிர்வாகிகள் லால்பேட்டை பேரூராட்சிக்கு சென்று கோரிக்கைகள் வைத்தனர்.

Tags: லால்பேட்டை

Share this