நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம்
லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் மக்தப் ஆசியர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று 2-3-2021 இஷா தொழுகைக்கு பிறகு லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரில் ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் முதல்வர், நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் A நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மக்தப் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மக்தப் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் லால்பேட்டை ஜாமிஆ மன்பஉல் அன்வாரின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒவ்வொரு மக்தபிகளிலும் முதல் மூன்று தரத்தில் உள்ள மாணவர்களை மக்தப் ஆசிரியர்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தீனியாத் இரண்டாம் பாகம் பொது தேர்வு நடத்தி பரிசுகள் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதற்காக மவ்லவி ஹாபிழ் சாதிக் அலி மன்பயீ, மவ்லவி ஹாபிழ் இன்ஆமுல்லாஹ் மன்பயீ, மவ்லவி முஹம்மது இர்ஷாத் இர்ஷாதி, மவ்லவி முஹம்மது சமீர் மன்பயீ ஆகியோர்கள் அடங்கிய நான்கு ஆலிம் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது
பரிசுகள் கீழ் காணும் முறையில் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது
முதல் பரிசு ₹1500
2 ஆம் பரிசு ₹1250
3 ஆம் பரிசு. ₹1000
4 ஆம் பரிசு. ₹ 750
5 ஆம் பரிசு. ₹ 500
ஆறுதல் பரிசுகள் ₹200 ( 25 நபர்கள்)
இக்கூட்டத்தில் லால்பேட்டையில் உள்ள அனைத்து மக்தப் மத்ரஸா ஆசிரியர்கள், நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர், பொருளாளர் மற்றும் துணை செயலாளர்கள் கலந்து கொண்டனர்
Tags: லால்பேட்டை