லால்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது
கடலூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் கீழ் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் 2020-21-ம் கல்வி ஆண்டில் மாணவர்களின் கற்றல் திறன்களில் முதன்மையாகவும், மாணவிகள் சேர்க்கையில் அதிகமாகவும், பள்ளி வளர்ச்சிக்காக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்திய 32 பள்ளிகளுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா தலைமை தாங்கினாா். பின்னா் அவா் லால்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருதை முதன்மை கல்வி அலுவலர் வழங்கினார்.இதில் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் எல்லப்பன், வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், ராமதாஸ், செல்வி, அந்தோணிராஜ், கோபிநாதன், மேற்பார்வையாளர் லட்சுமி, சமக்ர சிக்ஷா அலுவலர்கள் நசீம் அராபேகம், உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை