மறைந்த தளபதி ஷஃபிக்குர்ரஹ்மான் அவர்களின் மறைவிற்கு அபுதாபியில் காயிப் ஜனாஸா தொழுகை மற்றும் இரங்கள் கூட்டம்...!
பிப்ரவரி 11,அபுதாபி.
இந்திய யூனியன் முஸ்லீம் மாநில துணை தலைவர் மெளலான மெளலவி அல்ஹாஜ் தளபதி லால்பேட்டை A.ஷஃபிக்குரஹ்மான் மன்பஈ ஹஜ்ரத் அவர்களுக்கு காயிப் ஜனாஸா தொழுகை 11.03.2021 வியாழக்கிழமை மஃரிப் தொழுகைக்கு பிறகு நடைப்பெற்றது.
அப்பொழுது அன்னாரின் மறுமை வாழ்விற்கா யாசீன் ஓதி துஆ செய்ப்பட்டு , அவர்களின் நல்லறங்களையும் , ஈமானிய பற்றையும், சமூதாயத்திற்காக கண்ணியமிகு காயிதே மில்லத் காலத்திலிருந்து அரை நூற்றாண்டு காலமாக சேவை செய்த பண்பையும்,35 ஆண்டுகளுக்கு மேலாக ஹாஜிகளுக்கான செய்த சேவையையும் கூறி நினைவு கூறப்பட்டது.
அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து தனக்கு பிடித்த நல்லடியாளங்களோடு சுவர்கத்தில் இருக்க துஆ செய்யப்பட்டது .
இரங்கள் கூட்டத்தை அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்தின் நிர்வாகிகளால் ஒருங்கிணைக்கபட்டு இதில் லால்பேட்டை சகோதரர்களும்,ரெட்டியூர், நெடுஞ்சேரி புத்தூர்,கந்தகுமாரன்,மதுரை என பல சகோதரர்களும் கலந்து கொண்டனர்.
Tags: லால்பேட்டை