Breaking News

சிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு

நிர்வாகி
0

லால்பேட்டை சிங்காரவீதி தொண்டு அறக்கட்டளை சார்பாக சிங்காரவீதி,பனேஸா நகர்,ஜன்னத் நகர்,கீழத்தெரு,கொல்லிமலை பகுதி,இக்பால் வீதி பகுதிகளை உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி லால்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கைகள் :

1.லால்பேட்டை சிங்காரவீதி பகுதியில் உள்ள பனேஸா நகரில் வடிகால் வாய்காலில் கழிவு நீர் தேங்கியும்,குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இதனை கருத்தில் கொண்டு சுகாதாரக் கேடு விளைவிக்க கூடிய அந்த வடிகால் வாய்க்காலை சரிசெய்து குப்பைகளை அகற்றி அங்கு பிளீச்சிங் பவுடர் வாரத்திற்கு இரண்டு முறை தூவி விட பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும் அங்கு பொதுமக்கள் குப்பைகளை போட குப்பைத்தொட்டிகளை அமைத்து தர வேண்டும்.

2.லால்பேட்டை சிங்காரவீதி பகுதியில் உள்ள தாரிக் நகர்,பனேஷா நகர்,ஜன்னத் நகர்,சிங்காரவீதி,கீழத்தெரு ,கொல்லிமலை பகுதி,இக்பால் வீதி,மேட்டு தெரு பகுதியில் உள்ள அனைத்து மின் கம்பங்களில் உள்ள பழைய TUBE லைட்டுகளை அகற்றிவிட்டு அனைத்து மின் கம்பங்களிளும் LED விளக்குகளை பொறுத்த வேண்டும் என்றும் மேலும் தெருவிளக்கு இல்லாத இடங்களில் தெருவிளக்கு போர்க்கால அடிப்படையில் அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

3.லால்பேட்டை பனேஸா நகர்,ஆதம் பள்ளிவாசல் பகுதி,கீழத்தெரு,ஜன்னத் நகர் ஆகிய தெருக்களின் சாலைகள் மிகவும் பழுந்து அடைந்து உள்ளது அரசு கணக்கீட்டின் படி சிமெண்ட் சாலைகள் (RCC) 25 வருடமும்,தார் சாலைகள் 4 வருடமும் கால அளவாக உள்ளது ஆனால் போடப்பட்ட சிமெண்ட் சாலைகள் பத்து வருடங்களுக்குள் மோசமாக பழுந்து அடைந்துள்ளது இந்த பகுதி சாலைகளை செயல் அலுவலர்கள் பார்வையிட்டு புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

4.லால்பேட்டை கொத்தவால் தெருவில் உள்ள பூங்காவும்,தாரிக் நகரில் உள்ள பூங்காவும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு செயல் அலுவலர் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

5.நாம் மேற்குறிப்பிட்ட அனைத்து பகுதியிலும் பொதுசுகாதாரம்,தெருவிளக்கு,சாலைகள் தினமும் சரியான நிலையில் இருக்க அறக்கட்டளை சார்பாக ஒத்துழைப்பும் தருகிறோம்.

6.லால்பேட்டை பகுதிக்கு உட்பட்ட காயிதே மில்லத் சாலை,சிதம்பரம் மெயின் ரோடு பகுதியில் குற்றங்களை தடுக்க,பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் சி.சி.டி.வி., கேமராக்களை பொருத்த வேண்டும்' என, கடந்த 2012ல், அரசாணை பிறப்பிக்கப்பட்டது அதன்படி நம் மேற்குறிப்பிட்ட பகுதியில் சி.சி.டி.வி., கேமராக்களை பொறுத்த பேரூராட்சி செயல் அலுவலர் காட்டுமன்னார்கோயில் காவல்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம் .

Tags: லால்பேட்டை

Share this