Breaking News

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாநில துணைத்தலைவர் தளபதி மௌலானா மௌலவி ஷஃபிகுர் ரஹ்மான் அவர்கள் மறைவு லால்பேட்டை மண்ணின் மைந்தரும் காயிதே மில்லத் கண்டெடுத்த முஸ்லிம் லீக்கின் மாநில துணைத்தலைவர் "தளபதி" என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மௌலானா மௌலவி ஷஃபீகுர் ரஹ்மான் மன்பயீ அவர்கள் (10/03/2021) செவ்வாய் கிழமை வல்ல இறைவனின் அழைப்பை ஏற்றார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

தளபதி அவர்கள் 1946 ஆம் ஆண்டு தீனின் கோட்டையாம் லால்பேட்டை மண்ணில்,பாரம்பரிய மார்க்கக் குடும்பத்தில் பிறந்து,தனது இளம் வயது முதல் இன்றுவரை தான் பற்றிய அரசியல் மற்றும் மார்க்க பயணத்தில் சிறிதும் சமரசம் செய்து கொள்ளாமல் சமுதாய நலன், பொது நலனுக்காகவே தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட எங்கள் மண்ணின் அரசியல் ஆளுமை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அடையாளமாய் தலைமை முதல் கிராம கிளை நிர்வாகிகள் வரை அறிமுகமான மரியாதைக்குரியவராகத் திகழ்ந்தவர்,

1974 ஆம் ஆண்டு லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியில் மௌலவி ஆலிம் மன்பயீ பட்டம் பெற்று சிறந்த மார்க்க அறிஞராகவும் சமுதாய சிந்தனையாளராகவும் இருந்தார்கள். சிறு வயது முதல் தன்னை முஸ்லிம் லீக்கில் இனைத்து கொண்டு பல பொருப்புகளில் சமுதாய அக்கறையுடனும் சமூக சிந்தனையோடும் பணியாற்றினார்கள். தான் கொண்ட கொள்கையில் துளி அளவும் கொள்கை மாறாமல் லீக்கின் பல பதவிகளில் பயணித்து தற்போது வரை மாநில துணைத்தலைவராக பணியாற்றி இருக்கிறார்கள்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டு சேவைக்காக பொது வாழ்வில் மணிவிழா கண்டவர்கள். எப்போழுதெல்லாம் மேடை பேச்சோ அல்லது கூட்டங்களில் பேசும் போது லால்பேட்டையின் பெருமையும் மன்பவுல் அன்வாரின் சிறப்பையும் பேசாமல் இருந்ததில்லை. இவ்வாறே தாங்கள் பெற்றெடுத்த மகன்களையும் முஸ்லிம் லீக்கின் இனைத்து தாங்கள் கொண்ட கொள்கை மாறாமல் பயணிக்க செய்தார்கள். அவர்களின் தியாகத்திற்கும் உழைப்பிற்கும் கிடைத்த அங்கிகாரம் வருகின்ற தேர்தலில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக தனது மூத்த புதல்வர் மௌலானா மௌலவி அப்துர் ரஹ்மான் ரப்பானீ அவர்களுக்கு முஸ்லிம் லீக் சார்பாக போட்டி இடுவதற்கு வாய்ப்பளித்து உருவாக்கி சென்றுள்ளார்கள்.

அன்னாரின் பாவங்களை வல்ல இறைவன் மன்னித்து தளபதி அவர்களின் கப்ரை பிரகாசிக்கச் செய்யவும் மறுமை வாழ்வை வெற்றி பெறச்செய்யவும் மேலும் அன்னாரின் பிரிவால் வாடுகின்ற குடும்பத்தார்கள் உறவினர்கள் என அனைவருக்கும் ஸப்ரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக என்று பிரார்த்தித்து துவா செய்கின்றோம்

இங்கனம்

அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்

Tags: லால்பேட்டை

Share this