ரமலான் சிறப்பு தொழுகை நேரம் அதிகரிக்கப்பட கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
கடலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புனித ரமலான் மாதத்தில் நடைபெறும் சிறப்பு தொழுகைக்காக நேரம் அதிகரிக்க வேண்டி மனு வழங்கப்பட்டது.அதில் கொரானா நோய் தொற்றுகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு அறிவித்துள்ள கட்டுபாடுகளுக்கு உட்பட்டு அனைத்து ஏற்பாடுகளையும் விரிவாக அனைத்து பள்ளிவாசல்களிலும் செய்யப்படும் என்பதை தெரிவித்து , வழிபாட்டுதளங்கள் இரவு 8 மணி வரை திறந்திருக்கலாம் என்ற விதி முறைகளிலிருந்து சிறப்பு தொழுகைக்காக இரவு 10 மணி வரை அனுமதிக்க வேண்டுமாறு மனுவில் குறிப்பிடபட்டு வழங்கப்பட்டது.
மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மெளலான சபியுல்லாஹ் மன்பஈ ஹஜ்ரத்,மாவட்ட செயலாளர் மெளலவி சிப்லி மன்பஈ ஹஜ்ரத்,மாவட்ட பொருளார் மெளலான அசதுல்லாஹ் ஹஜ்ரத்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மெளலவி S.அப்துல் ரஹ்மான் ரப்பானி, ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலரிடம் நேரில் வழங்கினர்.
கடலூர் மாவட்ட முஸ்லிம் லீக் செயலாளார் முஹம்மது இஸ்மாயில், ஜமாஅத்துல் உலமா சபை மாநில செயற்குழு உறுப்பினர் மெளலவி அப்துல் ஸலாம் தாவூதி,மெளலவி இஸ்ஹாக் சிராஜி ஆகியோர் உடனிருந்தனர்.
சிதம்பரம் லெப்பை தெரு ஜமாஅத் மற்றும் நெல்லிகுப்பம் அனைத்து ஜமாஅத் கூட்டமைப்பு சார்பிலும் மனு வழங்கப்பட்டது , இதில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் மூஸா,மாவட்ட சிறுமான்மை மக்கள் நல குழு செயலாளர் வி.உதயகுமார், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் வி.எம்.ஷேக் தாவூது மற்றும் ஹலீம்,ஜாக்கீர்,சபீர்,மாதவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Tags: சமுதாய செய்திகள்