லால்பேட்டையில் மஜகபொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன்ரசீது வாக்கு சேகரிப்பு!!
காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சிந்தனை செல்வன் அவர்களுக்கு 'பானை' சின்னத்திற்கு மத்திய அரசின் மக்கள் விரோததிட்டங்களை பட்டியலிட்டு வாக்குகள் கேட்டு மஜக பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் பரப்புரை செய்தார்.
லால்பேட்டை நகர் முழுவதும் திறந்த வாகனத்தில் வாக்குக் கேட்டபடி சென்றார், அவருடன் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களில் மஜக கொடிகளுடன் பானை சின்னம் பொறித்த பதாகைகளை ஏந்தி அவருடன் மஜகவினர் அணிவகுத்து வந்தனர்.
சிங்கார வீதி மற்றும் புது பஜார் உள்ளிட்ட இடங்களில் திரண்டிருந்த மக்களிடையே மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கை திட்டங்களான நீட், குடியுரிமை திருத்த சட்டம், புதிய வேளாண் சட்டங்கள், உதய் மின் திட்டம், ஒரே ரேஷன்கார்டு திட்டம் போன்றவற்றின் பாதிப்புகளை விளக்கி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் அதிமுகவை அகற்றிட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சின்னமான 'பானை' க்கு வாக்கு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வுகளில், மஜக மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராகிம், தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹுசைன், நிர்வாகிகள் கியாசுதீன், ஹம்ஜா, முசரப், பேரூர் செயலாளர் ஜெகபர் சாதிக் உள்பட அப்பகுதிகளை சேர்ந்த மஜக நிர்வாகிகளும், செயல்வீரர்களும் திரளாக பங்கேற்றனர்.
Tags: லால்பேட்டை