Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகளின் இணைய வழிக் கூட்டம்

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில நிர்வாகிகளின் இணைய வழிக் கூட்டம் (zoom meeting) 18.05.2021 செவ்வாய் கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. துவக்கமான அன்மையில் மறைந்த முஸ்லிம் லீக் நிர்வாகிகள் மற்றும் சமுதாய பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பிரார்த்தனை செய்யப்பட்டது.

மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் (முன்னால் சட்டமன்ற உறுப்பினர்) வரவேற் புரையாற்றினார். கூட்டத்தில் மாநில பொருளாளர் எம்.எஸ்.ஏ.ஷாஜஹான், முதன்மை துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான் (முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர்), மாநில துணைத் தலைவர்கள் கே. நவாஸ் கனி எம்.பி., திருப்பூர் பி.எஸ். ஹம்சா, மாநிலச் செயலாளர்கள் நெல்லை அப்துல் மஜீத், காயல் மகபூப், ஹெச். அப்துல் பாசித், வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன், ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹான், மில்லத் முஹம்மது இஸ்மாயில், கே.எம். நிஜாமுதீன், மாநில துணைச் செயலாளர்கள் ஆப்பனூர் ஆர். ஜபருல்லாஹ், எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி, ஆடுதுறை ஜமால் முஹம்மது இப்ராஹிம், இளைஞரணி தலைவர் எம்.கே. முஹம்மது யூனுஸ், செயலாளர் அன்சாரி மதார், முஸலிம் மாணவர் பேரவை மாநிலத் தலைவர் பழவேற்காடு அன்சாரி, செயலாளர் அன்சர்அலி, தேசிய பொதுச் செயலாளர் எஸ்.ஹெச். முஹம்மது அர்ஷத், மகளிரணி பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஆயிஷா, தொழிலாளர் யூனியன் பொதுச் செயலாளர் செய்யதுஅலி, தகவல் தொழில்நுட்ப அணி ஒருங் கிணைப்பாளர் சல்மான் முஹம்மது, இணை ஒருங் கிணைப்பாளர் மேலப் பாளையம் அப்துல் ஜப்பார், துணை ஒருங்கிணைப்பாளர் கோம்பை நிஜாமுதீன், வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் நரி முஹம்மது நயீம், சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் ஏ.எஸ். அப்துர் ரஹ்மான் ரப்பானி ஆகியோர் பங்கேற்று கருத்துரையாற்றினர்.

கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

1. தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அரசிற்கு பாராட்டு நடைபெற்று முடிந்துள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலில் மக்களின் பேராதரவுடன் தமிழ்நாடு முதலமைச்சராக பொருப்பேற்றுள்ள தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது.

கொரோனா தொற்று அசாதாரண சூழ்நிலையில் பொருப்பேற்ற நாள் முதல் மக்களின் துயர் துடைக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீறிய வழிகாட்டுதலில் அரும்பணிகளாற்றி வரும் மாண்புமிகு அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், முன் களப் பணியாளர்கள் உள்ளிட்ட வர்களுக்கு இக்கூட்டம் பாராட்டை தெரிவித்துக் கொள்கின்றது. அரசின் நடவடிக்கை களுக்கு பொது மக்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட இக்கூட்டம் கேட்டுக் கொள் கின்றது.

2.மதசார்பற்ற முற் போக்கு கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி

நடைபெற்ற தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு வாக் களித்தவர்கள், ஒத்துழைத்த கூட்டணி கட்சிகளின் நண்பர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றது.

3. கேரள முஸ்லிம் லீக் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்து

நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் கேரள மாநிலத்திலிருந்து மக்கள் பிரதிநிதிகளாக தேர்வாகியுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் 15 சட்டமன்ற பிரதிநிதிகள், அதன் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக்குட்டி எம்.எல்.ஏ., மலப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தேசிய துணைத்தலைவர் எம்.பி.அப்துஸ்ஸமது ஸமதானீ, நாடாளுமன்ற மாநிலங்களவை ராஜ்ய சபை உறுப்பினராக மீண்டும் தேர்வாகியுள்ள தேசிய பொருளாளர் பி.வி.அப்துல் வஹ்ஹாப் எம்.பி. ஆகியோருக்கு இக்கூட்டம் இதயப் பூர்வ மான வாழ்த்துக் களை தெரிவித்துக்கொள்கின்றது.

4. இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிடும் தொகுதிகளில் முன் எச்சரிக்கை நடவடிக்கை

நடைபெற்று முடிந்துள்ள தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இ.யூ.முஸ்லிம் லீக் போட்டியிட்ட கடையநல்லூர், வாணியம்பாடி மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்று தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்திருப்பது தாய்ச்சபை குடும்பத்தினர், சமுதாய பிரமுகர்கள், ஆதரவாளர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள் ளது. தோல்விக்கான கார ணங்களை ஆய்வு செய்வ துடன், வரும் காலங்களில் தேர்தல் பணிகளை முன்னெச் சரிக்கையுடன் எதிர் கொள்வதென இக் கூட்டம் தீர்மானிக்கின்றது.

5. உறுப்பினர் சேர்ப்புப் பணிகள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்ப்புப் பணியை தமிழகத்தில் கொரோனா நோய் பேரிடர் முடிந்தவுடன் துவங்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

6. பாலஸ்தீன முஸ்லிம் களுக்கு கைகொடுப்போம்; இஸ்ரேலின் யூத பயங்கர வாதத்திற்கு கண்டனம்

பாலஸ்தீனியர்களை தங்கள் தாயகத்திலிருந்து வெளியேற்றவும், கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்றவும், மஸ்ஜித் அல்-அக்ஸா மசூதியை அழிக்கவும் சமீபத்திய இஸ்ரேலிய சதித் திட்டத்திற்கு எதிராக அனைவரும் ஓரணியில் திரள வேண்டுமென முஸ்லிம் லீக் அழைப்பு விடுக்கிறது.

புனித ரமலான் இரவில் தொழுகையின்போது இஸ்ரேலிய இராணுவம் மசூதிமீது துப்பாக்கிச் சூடு நடத்தி பலர் பலத்த காயமடைந்தனர். காய மடைந்தவர்களை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லத் தயாரானபோது இஸ்ரேல் இராணுவம் ஆம்புலன்ஸ்களைக் தடுத்து நிறுத்தியுள்ளது. பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். மோதலையும் அச்சத்தையும் விதைத்து கிழக்கு ஜெருசலேமைக் கைப்பற்று வதற்கான நடவடிக்கை இது. மஸ்ஜித் அல்-அக்ஸாவை இடிப்பதும் இஸ்ரேலில் திட்டமாகும். சர்வதேச நடவடிக்கையால் 1967 எல்லைக் கோட்டை மீறுவதற்கு எதிராக உலக மக்கள் எழுந்திருக்க வேண்டும்.

பாலஸ்தீனிய மண் பாலஸ் தீனியர்களிடம் முழுமையாக ஒப்படைக்கப்பட்டால் மட்டுமே இப்பகுதியில் நீடித்த அமைதியை அடைய முடியும். இஸ்ரேலிய படைகளின் மிருகத்தனத்திற்கு எதிராக குரல் எழுப்ப சர்வதேச சமூகத்தையும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரத்தில் இந்திய அரசு அமைதி காப்பது ஏன் என தெரியவில்லை. மறுபுறம், இந்திய அரசாங்கம் இஸ்ரேலுடன் இராஜதந்திர, வர்த்தக மற்றும் வர்த்தக உறவை மேலும் வளர்த்து வருகிறது. பாலஸ்தீன மக்களின் உரிமைக்கு குரல்கொடுத்த முந்தைய இந்திய ஆட்சி யாளர்கள் பின்பற்றிய புத்தி சாலித்தனமான கொள்கை களுக்கு எதிராக தற்போதைய இந்திய அரசின் செயல்பாடுகள் வருத்தமளிக்கிறது. தவ றான உத்திகளை சரி செய்து, பாலஸ்தீனத்தில் பாதிக்கப் பட்ட மக்களுடன் நிற்குமாறு இந்திய அரசாங்கத்தை இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

7. கொரோனா நிவாரண நிதி

தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்கு இ.யூ. முஸ்லிம் லீக் மாநில குழு சார்பில் ரூபாய் 2 லட்சம் வழங்குவதென்றும் நிர்வாகிகள் மற்றும் சமுதாய பிரமுகர்களிடத்தில் வசூல் செய்வதன் மூலம் ரூபாய் 10 லட்சம் வழங்குவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் இ.யூ. முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக்குழு இணைய வழிக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டது. மாநில துணைச் செயலாளர் எஸ்.ஏ. இப்ராஹிம் மக்கி துஆவுடன் கூட்டம் நிறைவடைந்தது.

Tags: செய்திகள்

Share this