வீட்டில் இருந்து கொரோனாவை ஒழிப்போம்! குடும்பத்தை காப்போம்.!
வீட்டில் இருந்து கொரோனாவை ஒழிப்போம்! குடும்பத்தை காப்போம்.!
கொரோனாவின் வீரியம் லால்பேட்டையில் சீரிப் பாய்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் நம் உயிரை நாம்தான் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமே தவிர அரசாங்கம் நம்மை பாதுகாக்கும் என பாராமுகமாக நமது பணிகளை தொடர்ந்தால் நமக்கும்,நமது குடும்பத்திற்கும் தான் ஆபத்து என்பதை முதலில் உணர வேண்டும் என நமதூர் மூத்த மருத்துவர் மரியாதைக்குரிய டாக்டர்.ஏ.ஆர்.அப்துஸ் ஸமது அவர்கள் தனது கவலையை வேதனையோடு பகிர்ந்துள்ளார்.
ஊரடங்கை கண்காணிக்க லால்பேட்டைக்கு வருகை தரும் காவல்துறையினரே அச்சப்படும் அளவிற்கு பொதுமக்கள் நடமாட்டம் சர்வசாதாரணமாக இருப்பதை அறியும்போது அதிர்ச்சியளிக்கிறது.
திட்டமிட்ட திருமணங்கள் திட்டமிட்டபடி மக்கள் திரளோடு நடக்கின்றன. மரணம் அடைந்த வீடுகளிலும், கொரோனா பாதித்தவர்களின் வீடுகளிலும் வழக்கம் போல் கூட்டம் அலைமோதுகிறது.
மஸ்ஜிதுகளின் முகப்பு வாசல்கள் அடைக்கப்பட்டதை போன்று பின்புற வாயில்களையும் அடைத்து உடனடியாக பள்ளிகளை மூட முயல வேண்டும். முகக் கவசம் அணிந்தும், அணியாமலும், சமூக இடைவெளியை கடிபிடித்தும் கடை பிடிக்காமலும் நோய் பரவ நாமே காரணமாகி விடக் கூடாது.
ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்துதல், கொரோனா மரணங்களை அடக்கம் செய்தல் இவைகள் அனைத்தும் நோய் வந்த பின்னர் நிகழுபவை. நோயே வராமல் தடுக்க நாமும் நம் ஊரில் உள்ள தன்னார்வலர்களும் முன்னின்று அனைவரையும் வீடடங்கி இருக்கச் செய்வோம்.
இவ்விஷயத்தில் லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத்,ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் அனைத்து மஹல்லா நிர்வாகிகளும் போர்க் கால அடிப்படையில் கவனம் செலுத்தி உள்ளூர் கட்டுப்பாடுகளை கடுமையாக்க அன்போடு வேண்டுகிறேன்.
இஸ்லாமிய மார்க்கம் Scientific religion அறிவியல் சார்ந்த மார்க்கமாக திகழும் போது அதற்கு மாறான கொள்கையை கடைபிடித்து மார்க்கத்திற்கும் அவப் பெயர் தேடித் தர நாம் ஒரு போதும் துணை போயிடலாகாது என்பதை அறிந்துணர்ந்து விழிப்போடு தனித்திருப்போம், கொரோனாவை விரட்டி அடிப்போம்.
- அப்துல் ரஹ்மான் ரப்பானி.
Tags: லால்பேட்டை