லால்பேட்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பாக லால்பேட்டையில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு நிகழ்ச்சி மாவட்ட தலைவர் A.பயாஸ் அஹமது மன்பஈ அவர்கள் தலைமையில் நடைபெற்றது பேரிடர் மையத்தை காட்டுமன்னார்குடி காவல்துறை ஆய்வாளர் குநபாலன் அவர்கள் திறந்து வைத்தார் மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் மக்பூல் அஹமது மாவட்ட துணைத்தலைவர் ஷர்புதீன் தொகுதி தலைவர் நூருல்லாஹ் காட்டு மன்னார்குடி நகர தலைவர் நிசார் அஹமது லால்பேட்டை நகர தலைவர் அஹமதுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட், கொரோனா பேரிடர் மையத்துடன் இணைந்து, லால்பேட்டை SDPI கட்சியின் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவையும் தொடங்கப்பட்டது,
கால சூழ்நிலை கருதி புதிய ஆம்புலன்ஸ் வாங்கும் வரை இந்த வாகனத்தை ஆம்புலன்ஸ் வாகனமாக பயன்படுத்தப்படுகிறது.
Tags: லால்பேட்டை
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு