இதான் தகுந்த நேரம்..!
இக்கட்டான சூழ்நிலை ... நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வது... கடமை. அதற்கு அரசு கூறும் நோய் பாதுக்காப்புச் சட்டங்களைப் பின்பற்றுவது நம் அனைவரின் மீதும் கடமை.
இந்நேரத்தில்....தேவையில்லாமல் வெளியில் சுற்றாமல்...
வீடுகளில் குர்ஆன் மஜ்லிஸ் நடத்தலாம்... குழந்தைகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கலாம். குர்ஆன் சுராக்களை மனனம் செய்யலாம்..... சிறிய ,சிறிய ஹதிஸ்களை மனனம் செய்யலாம்....
இஸ்லாமிய வரலாறுகளை வீட்டில் உள்ளவர்களுக்குப் படித்துக் கொடுக்கலாம்.... இப்படியாக நம் நேரங்களைச் செலவு செய்தால்.... நமக்கும் பயனாக இருக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கும் பயனாக இருக்கும்.
நம்மையும், நம்மைச் சுற்றியுள்ளவர்களையும் நோய்களை விட்டு பாதுகாப்பது நம் அனைவரின் மீதும் கடமை..
A. H. யாசிர் ஹசனி
Tags: பயனுள்ள தகவல்