தினசரி அமல்களை திட்டமிட்டு நேரங்களை முறைப்படுத்துங்கள் !
கொரானா பரவல் அதிகரித்து வருவதால் நமதூர் மக்களின் நலன் கருதி லால்பேட்டை முஸ்லிம் ஜமாஅத் சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது
அதன் அடிப்படையில் ஐந்து நேரத் தொழுகைக்கு பள்ளிவாசலுக்கு வராமல் வீட்டிலேயே தொழுதுக் கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அவரவர் வீடுகளில் குடும்ப உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து ஜமாஅத்தாக தொழுகை நடத்துங்கள்
ஐந்து நேரத் தொழுகைக்கும் ஜமாஅத் நடக்கும் நேரத்தை ஏற்படுத்தி அதன்படி தொழுது வாருங்கள்.
தொழுகைக்கு பிறகு குடும்பம் உறுப்பினர்கள் கூட்டாக சேர்ந்து குர்ஆன் ஓதுதல், திக்ரு செய்தல், துஆ செய்தல் போன்ற செயல்களுக்கும் நேரத்தை ஏற்படுத்தி செயல் படுங்கள்
இதுப் போன்று நேரங்கள் குறித்து செயல் படும் போது எந்த அமலும் தவறி விடாமல் தொடர்ந்து செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
ஊரடங்கால் ஏற்பட்டுள்ள இந்த கட்டாய ஓய்வை பயனுள்ளதாக ஆக்கி கொள்வோம்
அனைத்து கஷ்டங்கள், நோய்களிலிருந்து அனைத்து மக்களும் பாதுகாப்பு பெற அல்லாஹ்விடம் துஆ செய்வோம்.
ஏ.ஆர். ஸலாஹுத்தீன் மன்பயீ லால்பேட்டை
Tags: இஸ்லாம்