Breaking News

லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் !

நிர்வாகி
0

லட்சத்தீவு மக்களின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாக்க வலியுறுத்தியும் சர்வதிகார போக்கோடு செயல்படும் "பாபுல் கோடா பட்டேல்" என்கிற அதிகாரியை திரும்பப்பெற வலியுறுத்தியும் மத்திய பிஜேபி அரசை கண்டித்தும் லால்பேட்டை நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஆர்ப்பாட்டம் !

லட்சத்தீவு மக்களின் கலாச்சார தனித்தன்மையை பாதுகாக்க வலியுறுத்தியும், சர்வதிகார போக்கோடு செயல்படும் பாபுல் கோடா பட்டேல் என்கிற அதிகாரியை திரும்பப்பெற வலியுறுத்தியும், மத்திய பிஜேபி அரசை கண்டித்தும் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புது பஜார் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது அவர்கள் தலைமை தாங்கினார்.

நகர செயலாளர் எம்.ஹெச்.முஹம்மது ஆசிப், துணை செயலாளர் அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசிய கவுன்சில் உறுப்பினர் எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி கண்டன முழக்கங்களை எழுப்பினார்.

நகர துணை செயலாளர் அபுஸுஹுது, msf மாநில பொருளாளர் அஹமது, மாவட்ட யூத் லீக் பொருளாளர் முபாரக், நகர msf தலைவர் ஏ.கே.முஹம்மது அஸ்கர், நகர நிர்வாகிகள் ஏ. உபைதுர் ரஹ்மான், ஏ.சாதுல்லா, msf இம்ரானுல்லா, அமீரக காயிதே மில்லத் பேரவை உறுப்பினர்கள் அஸ்கர் அலி, அஹமதுல்லா, மற்றும் ஜவஹருல் ஹக், முஹம்மது பாருக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags: லால்பேட்டை

Share this