Breaking News

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி..! சிந்தனைசெல்வன் MLA சந்தித்த மஜகவினர்..!

நிர்வாகி
0
ஜூன் 28.,

காட்டுமன்னார்கோயில்., கடலூர் தெற்கு மாவட்டம் #மனிதநேயஜனநாயககட்சி சார்பில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களை, துறை சார்ந்த அமைச்சர்களை சந்தித்து தொகுதி, தமிழர் நலன் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்துவது வழக்கம்.

கடந்த 5 ஆண்டுகளில் அதிகம் துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்து வென்று இருக்கிறது மனிதநேய ஜனநாயக கட்சி.

அந்தவகையில் புதிதாக வெற்றி பெற்ற காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் #மசிந்தனைசெல்வன்MLA அவர்களை தொகுதி, சமூக நலன் சார்ந்த 5 கோரிக்கைகளை வலியுறுத்தி #மனிதநேயஜனநாயககட்சி சார்பில் சந்தித்தனர்.

1. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பீகார், கேரளா, மேற்கு வங்கம், புதுச்சேரி சட்டமன்றங்களில் இயற்றப்பட்ட தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இயற்ற வலியுறுத்த வேண்டும்.

2. காட்டுமன்னார்கோயில் தொகுதிக்குட்பட்ட லால்பேட்டை பேரூராட்சிக்கு என்று தனி அரசு மருத்துவமனை வேண்டும்.

3.கொரானா 3 ஆம் அலையை எதிர்கொள்ளும் வகையில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் உரிய மருத்துவர்களோடு ஆக்சிஜன் படுக்கையை ஏற்படுத்தி தர வேண்டும்.

4. காட்டுமன்னார்கோயில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தற்காலிகமாக இயங்கி வரும் MGR அரசு கலைக்கல்லூரியின் கட்டிடத்தை காட்டுமன்னார்கோயில் பேரூராட்சிக்கும், லால்பேட்டை பேரூராட்சிக்கும் இடையில் அமைத்து தர வேண்டும்.

5. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல, லால்பேட்டையில் காயிதே மில்லத் பெயரில் அரசு மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும்.

போன்ற கோரிக்கைகள் மஜக சார்பில் வைக்கப்பட்டது.

உடனே நிறைவேற்றி தருவதாகவும் சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

அதோடு லால்பேட்டையில் உள்ள துணை சுகாதார நிலையங்களின் கட்டிடம் மிகவும் மோசமடைந்து இடிந்து விழும் தருவாயில் உள்ளது நேரடியாக சென்று உடனே ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும் என்று மஜகவினர் கேட்டுகொண்டனர். ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்.

இச்சந்திப்பின் போது மாவட்ட செயலாளர் OR. ஜாகிர் ஹுசைன், மாவட்ட துணை செயலாளர்கள் கியாசுதீன், கொள்ளுமேடு ரியாஸ், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் முஸரப், நூர், யாசர் அலி, இத்ரீஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags: லால்பேட்டை

Share this