லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அதிரடி ஆய்வு
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை காட்டுமன்னாரகோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு சிந்தனைச் செல்வன் அவர்கள் ஆய்வு செய்தார்.
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர் சங்க நிர்வாகிகள் (16/06/2021) அன்று மாலை காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு. சிந்தனைச்செல்வன் அவர்களை சந்தித்து அரசு பள்ளியில் மாணவர்களுக்கு போதிய கழிப்பிட வசதியில்லை என்றும் புதிதாக கழிப்பிட கட்டித் தரும்படி கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று சில மனித்துளிகளில் லால்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் வருகை தந்து பள்ளியை ஆய்வு செய்தார். பின்னர் உடனடியாக கழிப்பிட கட்டிடம் கட்டித் தருவதாக உறுதி கூறினார். கோரிக்கை கொடுக்கப்பட்ட சில மணி நேரத்திற்க்குள் ஆய்வு செய்து கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறிய நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் முன்னால் மாணவர் சங்க நிர்வாகிகள் நன்றி கூறினர்.
ஆய்வின்போது தலைமை ஆசிரியர், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், முன்னால் மாணவர் சங்க நிர்வாகிகள், பேரூராட்சி செயல் அலுவளர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
Tags: லால்பேட்டை