Breaking News

இராகுல்காந்தி பிறந்தநாள் விழா..!

நிர்வாகி
0

கடலூர் மாவட்டம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநிலத்தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் அறிவுறுதலுக்கு இணங்க "இராகுல் காந்தி" அவர்களின் பிறந்தநாள் விழா எள்ளேரி கிழக்கு பகுதியில் இருக்கும் "செம்மை ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில்" இன்று(19-06-21), காலை உணவு வழங்கி கொண்டாடப்பட்டது.

மாவட்டத் தலைவர் செந்தில் நாதன், மாநிலச்செயலாளர் சித்தார்த்தன்,மாநில பொதுக்குழு உறுப்பினர்மணிமொழி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

வட்டாரத்தலைவர் திருவரசமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். மாவட்டத்துணைத்தலைவர் நஜீர் அஹமது ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு பரிமாறினார். மாவட்ட செயலாளர்கள் ஜோதிபாசு, ஜின்னா,முஹம்மது பஷீர் லால்பேட்டை நகரதலைவர் ஹிதாயத்துல்லா முன்னாள் நகரகாங்கிரஸ் தலைவர் நியமத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எள்ளேரி காங்கிரஸ் கிராமகமிட்டி தலைவர் பன்னீர் செல்வம் அனவருக்கும் நன்றி கூறினார்.

Tags: செய்திகள்

Share this