முதல் அமைச்சர் பொதுநிவாரண நிதிக்கு முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச்சங்கம் நன்கொடை..!!
லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச்சங்கத்தினர் இன்று(20-06.2021) வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அவர்களை மரியாதை நிமித்தமாக அவரதுஇல்லத்தில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச்சங்கத்தின் சார்பில் தலைவர் ஜாபர் அலி முதல்அமைச்சர் பொதுநிவாரணநிதிக்கு நன்கொடையாக ரூ 1 லட்சம் காசோலைஅமைச்சரிடம் நேரில் வழங்கினார்.
அப்போது பட்டதாரிகள் சங்கத்தின் செயலாளர் ஷேக்முஹம்மது,பொருளாளர் அஸ்கர் ஹுஸைன் ,செயற்குழு உறுப்பினர் நஜீர்அஹமது, உறுப்பினர் அஹமதுல்லா, ராஜா மற்றும் தெற்கிருப்பு நெடுமாறன்,மணிகண்டன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Tags: லால்பேட்டை