Breaking News

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்

நிர்வாகி
0

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடலூர் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 06.05.2021 ஞாயிறு மாலை 7:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை காணொளி (Zoom) மூலம் எழுச்சியுடன் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு கடலூர் தெற்கு மாவட்டத் தலைவர் ஹாஜி எம்.ஏ.முஹம்மது ஜகரிய்யா தலைமை தாங்கினார். லால்பேட்டை நகர பொருளாளர் ஏ.முஹம்மது தைய்யூப் முஹிப்பி கிராஅத் ஓதினார். மாவட்டச் செயலாளர் ஏ.சுக்கூர் வரவேற்றுப் பேசினார். கூட்டத்திற்க்கு சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பங்கேற்று உரையாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர்கள் மங்கலம்பேட்டை நூருல்லாஹ், லால்பேட்டை அனீசுர் ரஹ்மான், கொள்ளுமேடு மெளலவி முஹம்மது ஹாரிஸ் மன்பஈ, மாவட்ட துணைச செயலாளர்கள் முஹம்மது முஸ்தபா,அமானுல்லாஹ், மாவட்ட இளைஞர் அணி முஹம்மது முஸ்தபா, சுஜாவுத்தீன், மாவட்ட அமைப்புச் செயலாளர் அப்துஸ் ஸலாம் நாஸிர்,

முஸ்லிம் மாணவர் பேரவை ஏ.எஸ்.அஹமது, முஹம்மது நயீமுல்லாஹ், சிதம்பரம் நகரத் தலைவர் முஹம்மது அலி, லால்பேட்டை நகர நிர்வாகிகள் அப்துல் வாஜிது, முஹம்மது ஆஸிப், லால்பேட்டை சல்மான், முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி,மங்களம்பேட்டை நகர நிர்வாகிகள் சர்தார், சேட் அப்துல் ரஹ்மான், நூர் முஹம்மது, சலாஹுதீன், தகவல் தொழில் நுட்ப அணி அஷ்ரப், பரங்கிப்பேட்டை நகர நிர்வாகிகள் ரியாஜ் அஹமது, மௌலவி ஷேக் ஆதம் மழாஹிரி, ஆயங்குடி முஹம்மது இக்பால்,மானியம் ஆடூர் முஹம்மது சுலைமான், காட்டுமன்னார்கோயில் முஹம்மது யூசுப், கொள்ளுமேடு இம்தியாஸ் அஹமது ஆகியோர் பங்கேற்று கருத்துக்கள் தெரிவித்தும், ஆலோசனைகள் வழங்கியதன் அடிப்படையிலும் கீழ்க்காணும் தீர்மானங்கள் ஏகமனதாக தக்பீர் முழக்கத்தோடு நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மாங்கள் பின்வருமாறு:-

1. இரங்கல் தீர்மானம் முஸ்லிம் லீக் கட்சிக்கு எதிரான எத்தனையோ அடக்குமுறைகள் அடுக்கடுக்காக வந்த போதும் மற்றவர்களால் இன்னல்கள் விளைவிக்க முயன்றபோதும் கொண்ட கொள்கையில் கொஞ்சமும் பிறழாமல் பச்சிளம் பிறைக்கொடியின் கீழ் தமது வாழ்க்கையை சமுதாயத்திற்காகவும் மக்களுக்காகவும் அற்பணித்து அயராது பாடுபட்டு வந்த மாநில துணைத் தலைவர் மவ்லானா லால்பேட்டை தளபதி ஏ.ஷபீகுர் ரஹ்மான் மன்பஈ., லால்பேட்டை மவ்லானா ஏ.பைஜுர் ரஹ்மான் மதனீ, லால்பேட்டை முன்னாள் நகர தலைவர் கே.எம் சுக்கூர், நகர துணைத் தலைவர் ஏ.ஜி.பஜ்லுர் ரஹ்மான், கடலூர் மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் ஆயங்குடி பஜ்லுதீன், லால்பேட்டை முன்னாள் துணைத் தலைவர் ஏ.அப்துல் பாசித், லால்பேட்டை மவ்லானா அப்துல் அஜீஸ் ரபீக்கிஷாஹ் நூரி, லால்பேட்டை மூத்த தலைவர் எஹ்யா நானா, முன்னாள் மாவட்டத் தலைவர் லால்பேட்டை அல்ஹாஜ் எஸ்.ஏ.அப்துல் கப்பார், விருத்தாசலம் நகர செயலாளர் ஹாஜி என்.எஸ்.கமால் பாஷா,13 வது வட்ட தலைவர் ஏ.ஜாக்கிர் ஹுசைன், பி.முட்லூர் நகர தலைவர் சுக்கூர், மங்கலம்பேட்டை கவுரவ ஆலோசகர் சவுரிராஜன் ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2) நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தளபதி திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நல்லாட்சி அமைந்திட திமுக தலைமையிலான மதச்சாற்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

3) சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் ஏணி சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் மவ்லானா ஏ. எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி அவர்களுக்கு 75,000 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் அளித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் இக்கூட்டம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

4) தமிழகமெங்கும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நிவாரணப்பணிகள் மேற்க்கொண்டுள்ள தாய்ச்சபை சொந்தங்களுக்கு இக்கூட்டம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. மேலும், கொரோனா தொற்று காலங்களில் பல்வேறு சிரமங்களை போக்கும் வகையில் மனித நேயத்தோடு பணிகளாற்றி வரும் அரசு அதிகாரிகள் , மருத்துவப்பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் , பொது நல அமைப்பினர்கள் அனைவருக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கிறது.

5) கொரோனா தாக்கம் முடிவுக்கு வந்தபின் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உறுப்பினர் சேர்க்கையை துரிதப்படுத்தி பிரைமரி தேர்தலை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

6) மத அடிப்படையில் குடியுரிமை வழங்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மனு தாக்கல் செய்துள்ளதை இக்கூட்டம் வரவேற்று பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறது.

7) மத்திய அரசால் லட்சத்தீவுக்கு நியமிக்கப்பட்டுள்ள குஜராத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பிரஃபுல் கோடா படேலின் சர்வதிகார போக்கால் மக்கள் அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர். அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவை அழிக்கப்பட்டு வருகிறது. உடனடியாக மத்திய அரசு லட்சத்தீவு மக்களின் கோரிக்கையை ஏற்கும் வகையில் அந்த அதிகாரியை திரும்பபெற வேண்டும் என இக்கூட்டம் வலியுறுத்துகிறது. 😎

மக்களின் உயிர்காக்க கொரோனா கால சூழலில் தளர்வுகளற்ற ஊரடங்கை அறிவித்தது மட்டுமின்றி மக்களின் வாழ்வாதார பாதிப்புகளை உணர்ந்து ரூ 2000 இருமுறை வழங்கவும் மேலும், மளிகை தொகுப்பு வழங்கவும் உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

9) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமையை பொதுத்தளங்களில் விமர்சிப்போர் மீது உரிய நடவடிக்கையை மேற்க்கொள்ள இக்கூட்டம் தலைமையை கேட்டுக்கொள்கிறது.

10) 10 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இஸ்லாமிய சகோதரர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. 11) நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு எதிராகவும் கட்சியின் கொள்கை கோட்பாடுகளுக்கெதிராகவும் செயல்பட்டவர்களை அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் மீது தலைமை ஒப்புதலுடன் நடவடிக்கை எடுப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

மாவட்டப் பொருளாளர் ஹாஜி ஷஹாபுதீன் நன்றி கூறினார். துஆவுடன் கூட்டம் நிறைவு பெற்றது.

Tags: செய்திகள்

Share this