லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா
பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்று கல்வியாளர்களால் மட்டும் அல்லாது அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்படுகிறார். இன்று 15/07/2021 (வியாழக்கிழமை) அவரது பிறந்தநாள் ஆகும்.
2006-ம் ஆண்டு முதல் காமராஜர் பிறந்தநாள், கல்வி வளர்ச்சி நாளாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் பள்ளிகளில் காமராஜர் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். காமராஜர் பற்றி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த வருடம் கொரோனா காலம் என்பதால் லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இன்றி நடைப்பெற்ற காமராஜர் பிறந்தநாள் மற்றும் மரக்கன்று நடும் விழாவில் தலைமை ஆசிரியர் திரு இளங்கோவன். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், மாணவர் சங்க செயலாளர் ஏ.ஆர். மர்ஜூக். உதவிதலைமையாசிரியர் திரு. கார்த்திகேயன், ஆசிரியர்கள் எஸ். ரமேஷ். வி. ரமேஷ் ஏ. சுந்தர். எம்.சுந்தர்ராஜ் டி.சத்தியநாதன் மற்றும் அலுவலக உதவியாளர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Tags: லால்பேட்டை