Breaking News

தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் திரு கேஎஸ்அழகிரி தளபதி ஷஃபீகுர்ரஹ்மான் குடும்பத்தினர்களிடம் நேரில் இரங்கல் .

நிர்வாகி
0

கடந்த மார்ச் 10 அன்று காலமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் அவர்கள் மறைந்த சமயத்தில் தேர்தல் பணியில் இருந்ததால் இன்று 20/07/2021 மாலையில் லால்பேட்டையில் உள்ள தளபதியின் தொழில் நிறுவன அலுவலகத்தில்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் திரு. கே.எஸ்.அழகிரி ex. MP அவர்கள் தளபதி ஷபீகுர் ரஹ்மான் குடும்பத்தினர்களையும், முஸ்லிம் லீக் நிர்வாகிகளையும் சந்தித்து ஆறுதலையும், இரங்கலையும் பகிர்ந்துக் கொண்டார்.

தளபதி ஷஃபீகுர் ரஹ்மான் புதல்வரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டவருமான எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி காங்கிரஸ் தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்றோர். பொது வாழ்வில் மணி விழா கண்ட காயிதே மில்லத் கண்டெடுத்த தளபதி நூலை நகர முஸ்லிம் லீக் செயலாளர் ஆசிப், மாவட்ட துணைத் தலைவர் அனீசுர் ரஹ்மான், ஏ. உபைதுர் ரஹ்மான் ஆகியோர் வழங்கினர்.

இ.யூ. முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் ம் தொலைபேசியில் திரு. அழகிரி அவர்கள் பேசினார். காங்கிரஸ் மாநில செயலாளர் சித்தார்த்தன் ,மாவட்ட தலைவர் செந்தில் நாதன், மாவட்ட துணைத் தலைவர் பி.எம். நஜீர் அஹமது, விவசாயிகள் சங்க இளங்கீரன்,காங்கிரஸ் நிர்வாகிகள் திருவரசமூர்த்தி, பாபு, ஹிதாயத்துல்லா, ஜின்னா மற்றும் இ.யூ.முஸ்லிம் லீக் மாணவர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags: லால்பேட்டை

Share this