Breaking News

புவி சூடாதலும்-இயற்கை சீற்றமும் (டாக்டர் ஏ.பீ. முகமது அலி,ஐ.பீ.எஸ்(ஓ)

நிர்வாகி
0

தற்போது நமது கவனமும், ஊடகங்களின் ஈர்ப்பும் கொரானா பற்றியும், அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடக்கும் ஆர்ப்பாட்டம், சண்டைகளைப் பற்றியும் தான் செலுத்தப் படுகிறது. ஆனால் உலகை அச்சுறுத்தும் புவி சூடாதலையும், அதனால் ஏற்படும் பேரழிவுகளையும் சற்று சித்திக்க இந்தப் பதிவினை உங்கள் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

நமது நாட்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கேதார்நாத் புனித தளம் அமைத்திருப்பதினை உங்களுக்குத் தெரியும். அங்கே ஏற்பட்ட பனிச்சரிவில் 169 பேர் சிக்கி இறந்து விட்டனர். பலர் காணவில்லை என்றும் கூறப் படுகிறது. அதற்கு காரணமாக புனிதத் தளத்திற்கு வரும் யாத்திரிகர்கள் வசதிக்காக தங்கும் விடுதிகளும், ஹோட்டல்களும், மாடி கட்டிடங்களும் காடுகளை அழித்து காட்டியதால் தான் என்று சொல்லப் படுகிறது. . ஜூலை மாதத்தில் கொட்டித்தீர்த்த அடை மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டு மஹாராஷ்டிரா மாநிலத்தில் சுமார் 140 பேர்கள் இறந்து விட்டார்களாம். சீனாவில் 1000 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு மழை பொழிந்தும், ஜெர்மனி,உள்பட பல நாடுகளில் மழையினால் பல சேதங்கள் அடைந்ததாக சொல்லப் படுகிறது. ஆர்க்டிக் கண்டத்தில் உள்ள பணிப் பாறை உருகி ஐரோப்பாவில் வெள்ளப் பெருக்காம். ஒரு பக்கம் அங்கே பணிப் பாறை உருகி சேதம் உண்டாக்கினாலும், மறு பக்கம் ருசியாவும், அமெரிக்காவும் போட்டிபோட்டுக் கொண்டு அங்கே பூமிக்குள் இருக்கும் எண்ணெய், எரிவாயு, தாதுப் பொருட்கள் ஆகிவற்றை எடுக்க ஆய்வு நடத்துகின்றனவாம்.

அடை மழை எவ்வாறு அழிவைத் தருகின்றதோ அதேபோன்று அதிக வெப்பமும், உலக அளவில் வெப்பத்தினை கக்கியுள்ளது என்பது குவைத்தில் நிழலில் 54 டிகிரி செல்சிஸ் 129 பாரங்கீட்டும் வெயிலில் 70டிகிரி செல்சிஸ் 158 டிகிரி பாரங்கீட்டும் உள்ளது. அதன் விளைவு கார்களின் மெட்டல் பகுதியும், டிராபிக் பிளாஸ்டிக் சிக்னல் பகுதியும் உருகி விட்டதாம். அதே போன்று தான் அமெரிக்கா, மற்றும் கனடா நாடுகளில் சில பகுதிகளில் 54 டிகிரி செல்ஸில் வெயில் கொளுத்தியதால் மெட்டல் பகுதி உருகி விட்டதாம். அதே போன்று பல பகுதிகளில் அமெரிக்காவின் காடுகளில் கட்டுக் கடங்கா காட்டுத்தீ பரவியதாம்.

முதன் முதலில் கார்பன்டை ஆக்சைட்டினை தொழில்சாலைகளிலும், மின் உற்பத்தி நிலையங்களிலும், வீடுகளிலும், வாகனங்களிலும், வெளியேறி சுற்றுப் புற சூழலுக்கும், வெப்பத்தினை கட்டுப் படுத்துவதற்கும் மிகவும் அவசியம் என்று 'Centre for Policy Research’ பேராசிரியர் டாக்டர் நவ்ரோஸ் துபாஷ் சொல்கிறார். 1970க்கு முன்பு வீட்டில் மர அடுப்பு இல்லாத வீடே இல்லை எனலாம். அதனிலிருந்து வெளியாகும் புகை தாய்மார்களை பாதித்து பல்வேறு நோய்களுக்கும் ஆளானார்கள் எனலாம். மின்சார உற்பத்திற்கு அடுப்புக் கரி மற்றும் நிலக்கரி மிகவும் தேவையான ஒன்று. அந்த மின் சுழற்சியில் வெளியாகும் புகை மண்டலத்தினை வட சென்னையில் குடியிருக்கும் மக்களுத் தெரியும். ஆகவே தான் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மிகுந்த சோலார் தகடுகள் மூலமும், சூழல் காற்றாலை மூலமும், கடல் அலை, காற்று, மழை, பூமிக்கு அடியில் உள்ள வெப்பத்தினை கண்டு பிடித்து(Geo Thermal) மின் சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. சென்னையில் ஓடும் மெட்ரோ ரயில் கூட சோலார் மின் உற்பத்தி மூலம் தான் இயக்கப் படுகிறது. ஆகவே அதுபோன்ற கார்பனுக்கு மாற்றான மின் உற்பத்தியினை மக்கள் பயன் படுத்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும்.

நிலைக்கத் தக்க மின் திறன்: 'Council on Energy and Environment and Water' மின் உற்பத்திக் கவுன்சிலின் தலைமை அதிகாரி 'அருணா கோஸ்' கூறும்போது இனிமேல் பெட்ரோல், டீசல், காஸ் பயன்படுத்தும் வண்டிகள் 2035க்கு பின்பு ரோடுகளில் காண முடியாது. மாறாக மின்சாரத்தால் பயன் படுத்தும் வாகனம் பயன் படுத்துவதே நாம் காணலாம். G 20 நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் உஷ்ணம் 2 டிகிரி செல்சிசுக்குள் கட்டுப்பாடுடன் உள்ளது. ஆனால் சராசரி இந்தியர் இரண்டு வகையாக கொள்கையினை கடைப் பிடிக்கின்றனர். சுத்தமான காற்று வேண்டும் ஆனால் சிக்கனமான டீசல் வண்டிகளையே பயன்படுத்திட வேண்டும். ஆகவே வருங்கால நமது சந்ததியினர் சுதந்திரமான காற்றினை சுவாசிக்க செய்யவேண்டுமென்றால் மாசு விளைவிக்கும் பெட்ரோல், டீசல், காஸ் பயன் படுவதினை குறைக்க வேண்டும். சுகாதாரத்திற்கு உலை வைக்கும் நெருக்கமான வாழ்க்கை:

ஜனத்தொகை பெறுக, பெறுக கிராமப்புற மக்கள் வேலை வாய்ப்பிற்காக நகரத்தில் குடியேறுகின்றனர். அப்போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனி தனி வீடு முடியாது. ஆகவே உயரமான கட்டிடத்தில் ஒண்டி குடித்தனம் வாழ முயல்கின்றனர். நகரங்களின் அருகில் உள்ள விலை நிலங்கள் குடியிருப்பு வீடுகளாக மாறி வருகின்றன. வயல்களில் இருந்த பச்சை பசேல் என்ற தாவரங்கள், மரங்கள் அழிக்கப் பட்டு குடியிருப்பு கோபுர வீடுகளாக மாறி உள்ளன. தற்போது 'Smart City' என்ற மாதிரி நகர பகுதிகள் பசுமை தாயகமாகவும் மாற வேண்டும் என்று "Integrated Urban Planning at World Resources Institute India' இயக்குனர் 'Jeya Tintav' சொல்கிறார். நகரில் வாழும் ஒவ்வொரு குடி மகனும் மரம் வளர்ப்பதை கொள்கையாக ஏற்கவேண்டும். அதோடு தனித்தனி வாகனத்தில் சென்றால் தான் மதிப்பு என்று கொள்ளாமல் passenger friendly கொள்கைக்கு மாறி வழியில் நிற்பவர்களுக்கு லிப்ட் கொடுக்கும் பழக்கமும் வேண்டும். 1983ம் ஆண்டு நான் சிங்கப்பூர் சென்றபோது எனது கல்லூரி தோழர் காரைக்கால் சாலி மரைக்காருடன் காரில் பயணிக்கும் வாய்ப்பினை பெற்றேன். அப்போது ‘பீக் நேரம்’ என்று சொல்லும் அலுவலக நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்கும் பயணிகளை தனியாக செல்லும் வாகன ஓட்டிகள் அழைத்துச் செல்வதனை கண்டேன். அப்போது தான் அவர்கள் தனி டிராபிக் லேனில் செல்ல முடியும். அதே போன்று தான் அங்கே குப்பையினை ரோட்டில் கொட்டினால் 5000 டாலர் அபராதமும், 3மாத தண்டனையும் வழங்குகின்றார்கள். 2012ம் ஆண்டு அதுபோன்று தண்டனை விதிக்கப் பட்டவர் 8195 என்றால் 2018 வரை தண்டிக்கப் பட்டவர் 39000 ஆகும். மக்களும் அரசுக்கு ஒத்துழைப்புத் தந்தால் தான் சிங்கப்பூர் போன்று சிறந்த நகரமாகப் படும்.

2011ம் ஆண்டு நான் ஆஸ்திரேலியா சென்ற போது எவ்வாறு குப்பைகளை சேகரிக்கின்றார்கள் என்று கண்டு ஒரு கட்டுரையும் எழுதியுள்ளேன். அங்குள்ள சிட்டி கவுன்சிலில் பணம் செலுத்தி பச்சை, மஞ்சள், சிகப்பு, நீலம் குப்பை கொட்டும் பிளாஸ்டிக் கொள்கலனை பெற்றுக் கொள்கின்றனர். வீடுகளில் வளர்க்கும் மரம் செடிகளை வெட்டும்போது அதனை பச்சை தொட்டியிலும், மறு சுழற்சிக்கு தேவையான பொருட்களான பிளாஸ்டிக் பொருட்களை மஞ்சள் தொட்டியிலும், தேவைப் படாத குப்பை கூளங்களை சிகப்பு தொட்டியிலும், வியாபார நிறுவனங்களில் சேரும் அட்டைப் பெட்டிகள் போன்றவற்றை நீல நிற தொட்டியிலும் போடுவர். அவைகளை ஒரு டிரைவர் இயக்கம் ஹைட்ராலிக்ஸ் வசதி உள்ள வண்டியில் ஒரு நாள் விட்டு ஒரு நாள் சேகரிக்கின்றனர். அவ்வாறு சேகரிக்கும் அனைத்துமே மறு சுழற்சி பயன்பாட்டிற்கு செல்கின்றது. குப்பைகளை நடு ரோட்டில் போடுவதால் கழிவு நீர் குழாய்கள் அடைக்கப் பட்டு கொசுக்கள் பெறுக வழி வகுக்கும். அத்துடன் மழை நீர் வடிகாலும் அடைபட்டுப் போகும். ஆகவே தான் ரோடுகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதினை காணலாம். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1,47, 613 டன் கழிவுகள் சேருகின்றது. அதில் 25லிருந்து 30 சதவீதம் தான் மறு சுழற்சிக்கு பயன் படுத்தப் படுகிறது. மீதியுள்ளவைகளை நகரங்களின் அருகிலுள்ள வெற்று இடங்களில் கொட்டும்போதும், அதனை எரிக்கும்போதும் சுகாதாரம் கெட்டு, பல்வேறு நோய்களும் அந்தப் பகுதி மக்களை பற்றிக் கொள்கிறது.

கடைகளில் பொருட்களை வாங்கும் போது கடைக்காரர்கள் கொடுக்கும் பிளாஸ்டிக் பைகளை வாங்கி விடுகிறோம். அதற்குப் பதிலாக அட்டைப் பை, துணிப் பை, சாக்குப் பை போன்றவற்றை ஏன் நாம் எடுத்துச் செல்லக்கூடாது. பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்குப் பதிலாக ஏன் மெட்டல் பாட்டில்களை பயன் படுத்தக்கூடாது. ஹோட்டல்களில் பிளாஸ்டிக் டம்ளர் கொடுப்பதினை நிறுத்தி கண்ணாடி உபயோகத்தினை ஏற்படுத்த வேண்டும். முனிசிபல் ஆக்ட் 2001ன் படி உபயோகிப்பவர் குப்பைகளை தரம் பிரித்து வைக்க வேண்டும் என்று கூறப் பட்டுள்ளது. அதனை ஒவ்வொரு முனிசிபாலிடியும் சரியாக செயல் படுத்துகிறதா என்று உறுதி செய்ய வேண்டுமென்று 'சகா ஜீரோ வேஸ்ட்' தலைமை அதிகாரி வில்மா ரோட்ரிக்ஸ் சொல்கிறார்.

பெரிய தொழிற்சாலை, கம்பெனிகள் கடமை:

ஒவ்வொரு பெரிய தொழில் நிறுவனங்களும், கம்பெனிகளும் கார்பன் புகையினை குறைக்க வேண்டிய கடமை உள்ளது என்று ஏரி வாய்வு மற்றும் அதன் பயன் பாடுகள் பற்றிய துறையில் போற்றத்தக்க அறிஞர் ஆர்.ஆர். ராஷ்மி சொல்கிறார். இந்தியாவில் 1000 கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. அதில் வெறும் 38 நிறுவனங்கள் மட்டும் கார்பனை குறைக்க வழிவகை செய்துள்ளது என்று பார்க்கும் போது ஆச்சரியமாக தெரியவில்லையா? ஆகவே பெரும் நிறுவன பங்குதாரர்கள் அந்த நிறுவனங்கள் கார்பனை கக்குவதை குறைக்க போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

காடுகள் பயன்பாடு:

காடுகள் மனித சமூக, பண்பாடுடன் இணைந்த ஒன்றாகும் என்று IIT கரக்பூர் விஞ்ஞானி டாக்டர் அம்ரிதா சென் கூறுகின்றார். அரசுகளால், நீதி மன்ற உத்தரவாலும் காடுகளை ஒட்டி உள்ள சமுதாய மக்களின் குடியிருப்புகளை அரசு அகற்றி விடுவதால் காடுகளை கண் போன்று காக்கும் மக்களிடமிருந்து பிரித்து விட ஒன்றாக கருதப் படுகிறது. மக்கள் வாழும் இடங்களுக்குப் பதிலாக காடுகளை அழித்து தொழில் நிறுவனங்களும், சுற்றுலா பயண விடுதிகளும் கட்டுவதாலும், அகல பாதைகளுக்கு தேவையான இடங்களை எடுத்துக்கொள்ள மரங்கள், வயல்கள் அழிப்பதாலும் சுத்தமான காற்று சுவாசிக்க மக்களை தடுக்கும் பெரும் முயற்சியாக கருத வேண்டும். அப்படி வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்படுத்தும் தீ காட்டுத்தீயாக பரவுகிறது. கென்யாவினைச் சார்ந்த அரசியல் வாதியும், இயற்கை பாதுகாவலருமான வங்காரி மத்தாய் என்ற பெண் ' கிரீன் பெல்ட் மூவ்மெண்ட் என்ற இயக்கத்தினை ஆரம்பித்து பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் பெண்களை ஒருங்கிணைத்து சுமார் 2 கோடி மரங்களை நட்டுள்ளார். அதற்காக அவருக்கு 2004ல் உயர்ந்த நோபல் பரிசு வழங்கப் பட்டது. ஒரு தனிப் பட்ட நபரே ஒரு இயக்கத்தினை ஆரம்பித்து 2 கோடி மரங்களை நடும்போது ஏன் அரசும், மக்களும் இணைந்து அதுபோன்ற இயக்கம் மூலம் மரங்களை நடக் கூடாது.

கடலினை காப்போம்:

உலகின் 70 சதவீதம் கடலால் ஆனது. கடலில் கலக்கும் கழிவு ஆயில், வீசப்படுகின்ற பிளாஸ்டிக் உபயோகப் பொருட்கள், குப்பை கூளங்களால் மாசு அடைந்து மீன் வளங்கள் மற்றும் கடல் வாழ் விலங்கினங்கள் பாதிக்கப் படுகின்றன மட்டுமல்லாது கடலின் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் குளிர்ந்த காற்று மழை வளத்தினை பொழிய செய்யாது செய்து விடும் என்று 'பயோ-ஓசினோக்ராபி அல்ப்பிரேட் வெபின்னேர் இன்ஸ்டிடியூட்' போராசிரியர் விக்டர் சாஜித் சொல்கிறார்.

கார்பன் என்ற நச்சு புகையினை குறைக்க கீழ்கண்ட வழிளை கையாளலாம்:

1) வெப்ப மண்டல நாடுகளான பிரேசில், இந்தோனேசியா, இந்தியா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் மரம் வளர்ப்பு திட்டத்தினை பொற்கால அடிப்படையில் அரசும் மக்களும் இணைந்து செயலாற்ற வேண்டும்.

2) போக்குவரத்தால் 80 சதவீத மாசு ஏற்படுகிறது. ஆகவே சைக்கிளிங், எலெக்ட்ரிக் வாகனங்களை உபயோகிக்க வேண்டும்.

3) 100 பெரிய கம்பெனிகள் 70 சதவீத கிரீன் ஹௌவுஸ்(Green House) கார்பன் வெளிப்படுத்துகிறது. அதனை கட்டுக்கள் வைக்க பங்குதாரர்கள் முயல வேண்டும்.

4) வீடுகள், அலுவலகங்கள் எப்போதும் ஏ.சி பயன் பாட்டிலேயே இல்லாமல் அவைகளில் காற்றோட்ட வசதி செய்து ஜன்னல், கதவுகள் அமைக்க வேண்டும். காரணம் மின்சாரம் தயாரிக்க அதிகமான கார்பன் தேவைப் படுவதால் அதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 5) மரக்கரி, நிலக்கரி பயன் பாட்டினை அதிகமாக குறைக்க வேண்டும்.

கருத்துக்கு: mdaliips@yahoo.com

Tags: கட்டுரை

Share this