லால்பேட்டையில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் ..!
லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் நடைப்பெற்ற 75 வது சுதந்திர தின விழா..
லால்பேட்டை முபாரக் ஜும்ஆ மஸ்ஜிதில் 75 வது சுதந்திர தின கொடியேற்று விழா முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தலைமையில் நடைப்பெற்றது. டாக்டர் அல்ஹாஜ் அப்துல் ஸமது தேசிய கொடி ஏற்றி வைத்தார், மெளலவி அப்துஸ் ஸமது மன்பஈ தேசிய கீதம் பாடினார், முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் இமாம் மவ்லவி முஹம்மது பாருக் ஹஜ்ரத் கிராத் ஓதினார், முஹம்மது தையுப் முஹிப்பி அவர்கள் நிகழ்சியை தொகுத்து வழங்கினார், JMA நிர்வாக குழு உறுப்பினர்கள் முனவ்வர் ஹுசைன், அனிசுர்ரஹ்மான், முஹம்மது ஹாமித், ஜெய்னுத்தின், முஹம்மது அன்வர், மவ்லவி மஹபூப் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர், சிறப்பு விருந்தினர்களாக மு. பேரூராட்சி மன்ற தலைவர் ஹாஜி சபியுல்லாஹ், JMA நிர்வாகக் குழு மு. பொருளாளர் ஹாஜி அப்துல் ரஷிது, மு.முத்தவல்லி அப்துல் அலி, முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி பொருளாளர் அஜிஜுர்ரஹ்மான் மற்றும் முபாரக் ஜும்ஆ பள்ளிவாசல் ஜமாஅத்தார்கள், மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். நிகழ்சி ஏற்பாட்டினை ரஹமத்துல்லாஹ், சமீர் அஹமது, முஹம்மது தாலிப், முஹம்மது ஆசிக், ரியாஜ், நூருல் அமீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
லால்பேட்டை பூங்கா வீதி தெற்கு பள்ளியில் நடைப்பெற்ற 75 வது சுதந்திர தின விழா..
72.5வது சுதந்திர தின கொடியேற்று விழா பள்ளியின் தலைமையாசிரியர் பாபு தலைமை தாங்கினார். முபாரக் ஜும்ஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.ஹெச். அப்துல் ரஜாக் தேசிய கொடி ஏற்றி வைத்தார், இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்விக்குழு நிர்வாகி, JMA நிர்வாகக் குழு உறுப்பினர் முஹம்மது அன்வர், JMA நிர்வாகக் குழு உறுப்பினர் அனீசுர் ரஹ்மான், முபாரக் பெண்கள் அரபுக்கல்லூரி பொருளாளர் அஜிஜுர்ரஹ்மான், அமானுல்லா, முஹம்மது தையூப் முஹிப்பி, மன்சூர், மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் பொதுமக்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
லால்பேட்டை இமாம் புகாரி ஸ்கூலில் சுதந்திர தின விழா கொடியேற்று நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பள்ளியின் தாளாளர் மௌலவி M.Y.முஹம்மது அன்சாரி மன்பயீ தேசியக் கொடியேற்றினார். பள்ளியில் கடந்தாண்டு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று நல்ல முறையில் கற்று ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியருக்கு மெடல் அணிவிக்கப்பட்டு ஷீல்ட் மற்றும் சர்டிபிகேட் வழங்கப்பட்டது. நிகழ்வில் பள்ளியின் செயலாளர் முஃபீத் அஹ்மத், தலைமை ஆசிரியை ஜெய்ஸ்ரீ ,ஜபருல்லா, இப்ராஹிம் சேட், சகீன் அஹ்மத் மற்றும் பெற்றோர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். சமூக இடைவெளியும், முகக்கவசமும் அணிந்து நிகழ்ச்சி செய்யப்பட்டது. இறுதியில் எல்லோருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
லால்பேட்டையில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக லால்பேட்டையில் மஜக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது.
இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் மற்றும் பேரூர் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் திரளாக பங்கேற்றனர்.
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நம் இந்திய தாய் திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடி ஏற்று விழா !
லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் நம் இந்திய தாய் திருநாட்டின் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின கொடி ஏற்று விழா 15/8/2021 ஞாயிற்று கிழமை காலை 8:30 மணியளவில் நடைபெற்றது.
தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ் இறைவசனம் ஓதினார். நகர செயலாளரும், கூட்டுறவு சங்க டைரக்டருமான எம்.ஹெச்.முஹம்மது ஆசிப் அனைவரையும் வரவேற்றார்.
மாவட்ட துணை தலைவர் அனீசுர் ரஹ்மான்,நகர துணை செயலாளர் அமானுல்லா, சவூதி காயிதே மில்லத் பேரவை நிர்வாகி மஸூத் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது அவர்கள் தலைமை வகித்து தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி சுதந்திர போராட்டங்களை நினைவு கூர்ந்து உரையாற்றினார். நகர பொருளாளர் முஹம்மது தைய்யூப் முஹிப்பி நன்றி கூறினார்.
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி வி.ஏ.அப்துல் ரஹ்மான், நகர துணை தலைவர்கள் எஸ்.எம்.ஹமீது, கே.எஸ்.சபியுல்லா, மவ்லவி ஏ.ஜே.ஹிலுர் , நகர துணை செயலாளர் அபூஸுஹுது, சிங்கார வீதி பகுதி தலைவர் சபீர் அஹமது, எம்.ஹெச்.முஹிப்புல்லா, ஏ.உபைதுர் ரஹ்மான், அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, அய்யூப் கான், மாவட்ட யூத் லீக் பொருளாளர் முபாரக், எம்.எஸ்.எஃப் மாநில பொருளாளர் அஹமது, அமீரக காயிதே மில்லத் பேரவை அஸ்கர் அலி, முஹம்மது ஹசன், நகர மாணவரணி தலைவர் A.k.அஸ்கர், இளைஞரணி முஹம்மது தவ்பீக், எம்.எஸ்.எஃப் அஹமதுல்லா, முஸாஹிர், அசார், இம்ரான், A.S.இஸ்மாயில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (15-08-2021) லால்பேட்டை பெருநகர தமுமுக சார்பில் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த சிறப்பு மிக்க கொடி ஏற்றும் நிகழ்வில் கடலூர் தெற்கு மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகள், லால்பேட்டை பெருநகர தமுமுக-மமக நிர்வாகிகள்,தமுமுக-மமக மாநில செயற்குழு உறுப்பினர்கள்,தமுமுக-மமக அணி நிர்வாகிகளான மனிதநேய தொழிற் சங்கம் (MTS), இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை (IPP) , சமூகநீதி மாணவர் இயக்கம் (SMI) சகோதரர்கள், வார்டு நிர்வாகிகள், நிர்வாக பொருப்பாளர்கள், ஜமாஅத்தார்கள், மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
தக்வா பள்ளியில் நடைப்பெற்ற 75 வது சுதந்திர தின விழா..
லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மஸ்ஜித் தக்வாவில் இன்று நடைபெற்ற 75 வது இந்திய சுதந்திர தின விழாவில் கடலூர் மாவட்ட அரசு காஜி ஜாமிஆ மன்பஉல் அன்வார் முதல்வர் மவ்லானா மவ்லவி ஹாபிழ் A. நூருல் #அமீன் ஹள்ரத் அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார்கள். இந்த விழாவில் தக்வா பள்ளி இமாம் மவ்லவி A.M. பகீர் முஹம்மது மன்பஈ ஹஜ்ரத், முத்தவல்லி, முஅத்தின் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்....லால்பேட்டை அரசினர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்ற 75வது சுதந்திர தின கொடியேற்று விழா பள்ளியின் தலைமையாசிரியர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ஆசிரியர் எஸ். ரமேஷ் வரவேற்புரையாற்றினார் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.ஜே. பத்ஹூத்தீன் தேசிய கொடி ஏற்றி வைத்தார், இந்நிகழ்ச்சியில் முன்னால் மாணவர் சங்க செயலாளர் ஏ.ஆர். மர்ஜுக். உயர்நிலைக்குழு நிர்வாகிகள் எஸ்.ஹெச். நூருல் அமீன். ராம்குமார், உதவி தலைமையாசிரியர் எஸ். கார்த்திகேயன். பைஜுர் ரஹ்மான், நிஜார் அஹமது மற்றும் ஆசிரியர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட முஹம்மது உசாமா, யக்கின் அஹமது ஆகியோருக்கு தலைமை ஆசிரியர் பென்னாடை போத்தி கவுரவித்தார்.
Tags: லால்பேட்டை