Breaking News

அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் 75வது இந்திய சுதந்திரதின நிகழ்ச்சி..!

நிர்வாகி
0

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் அய்மான் சங்கம் சார்பில் 75வது இந்திய சுதந்திரதின நிகழ்ச்சி யூடியூப், பேஸ்புக் மற்றும் ஜூம் காணொளியின் மூலமாக நாள் 15-08-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை அமீரக நேரம் 7:30 மணி அளவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் அய்மான் தலைவர் கீழக்கரை ஹெச்.எம்.முஹம்மது ஜமாலுத்தீன் அவர்கள் தலைமை வகித்தார்கள்

அய்மான் சங்கத்தின் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முஹம்மது அப்துல் காதர் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள்

நிகழ்ச்சிக்கு நிர்வாக செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஏ.ஹெச்.சயீத் முஹம்மது பாசில் அவர்கள் இறைவசனம் ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்

அய்மான் சங்கத்தின் துணைத் தலைவர் ஒய். எம். அப்துல்லாஹ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்

அய்மான் சங்கத்தின் மார்க்கதுறை செயலாளர் மெளலவி எஸ்.எம்.பி. ஹுஸைன் மக்கி மஹ்லரி முன்னுரை நிகழ்த்தினார்கள்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் வழக்கறிஞர் வெ.ஜீவகிரிதரன் அவர்கள் நிகழ்ச்சியில் தேசம் மீது நேசம் கொண்டவர்கள் யார் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்கள்

அதற்குப்பின்னால் அய்மான் சங்கத்தின் மக்கள் தொடர்புச் செயலாளர் தேவிப்பட்டிணம் ஹாஜா முபினுத்தீன் நன்றியுரை வழங்கினார்கள் மற்றும் துஆவுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய முஸ்லிம் பேரவை , அபுதாபி திமுக தளபதி பேரவை, அபுதாபி லால்பேட்டை ஜமாத் , காயிதே மில்லத் பேரவை அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் மலேசியா சிங்கப்பூர் கொழும்பு நாடுகளிலிருந்தும் ஜூம் காணொளியில் கலந்து கொண்டார்கள்.

இறுதியில் முன்னாள் தலைவர் இப்போதைய கீழக்கரை தலைமை டவுன் காஜி டாக்டர் காதர் பக்ஸ் ஹுசைன் சித்திக் அவர்கள் சிறப்பு விருந்தினர் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்கள்

நிகழ்ச்சி ஏற்பாடுகளை கௌரவ ஆலோசகர் ஆவை A. S. முஹம்மது அன்சாரி, பைத்துல் மால் பொது செயலாளர் பார்த்திபனூர் நிஜாம் மைதீன்,துணைப் பொருளாளர் பசுபதிகோவில் சாதிக் பாட்சா உள்ளிட்டோர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags: உலக செய்திகள்

Share this