Breaking News

தளபதி ஷபிக்குர்ரஹ்மான் அவர்கள் நினைவைப் போற்றி நற்சேவையாளர் விருது

நிர்வாகி
0

15/08/2021 காரைக்கால் நகரில் எழுச்சியோடு நடைபெற்ற சிராஜுல் மில்லத் தமிழ் இலக்கியப் பேரவை சார்பில் "சமுதாயப் பணி செய்த சான்றோர்களுக்கு சங்கைமிகு விருது வழங்கும் விழாவில்" சமீபத்தில் மறைந்த இ.யூ முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர்

தளபதி A. ஷபீகுர் ரஹ்மான்அவர்களுக்கு வழங்கப்பட்ட நற்சேவையாளருக்கான விருதை கடலூர் தெற்கு மாவட்ட இ.யூ. முஸ்லிம் லீக் துணைத் தலைவர் அனீசுர் ரஹ்மான், லால்பேட்டை நகர துணைச் செயலாளர் அமானுல்லாஹ், சவூதி காயிதே மில்லத் பேரவை நிர்வாகியாகப் பணியாற்றிய தியாகி மசூது அஹமது, அமீரக காயிதே மில்லத் பேரவை அபுதாபி மண்டல செயலாளர் முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி, தகவல் தொழில்நுட்ப அணி இம்தியாஸ் அஹமது ஆகியோருடன் இணைந்து தளபதி அவர்களின் புதல்வர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பெற்றுக் கொண்டு ஏற்புரையாற்றினார் .

காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் A.M.H.நாஜிம் MLA அவர்கள் விருதுகள் வழங்கி நிறைவுப் பேருரையாற்றினார்.

சந்தனத் தமிழ் அறிஞர் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் அவர்களின் பெயரை காரைக்காலின் பிரதான சாலைக்கு சூட்டப்படும் எனும் புதுவை அரசின் அறிவிப்பு கிடப்பில் போடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி கால தாமதம் இன்றி நடைமுறை படுத்திட வேண்டுமென ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி பேசுகையில் வலியுறுத்தினார்.

மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள், இதனை புதுவை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற துணை நிற்பேன் என அன்பொழுக உறுதியளித்தார். ரோசிரியர் கலைமாமணி நசீமா பானு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைமை நிலையப் பேச்சாளர் A.ரஷீத் ஜான், காரைக்கால் மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞர் அணி செயலாளர் முஹம்மது அபூதர், புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் சமீர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

நிகழ்வில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் புதுச்சேரி மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அலி, மாவட்டத் தலைவர் முஹம்மது ஆரிப் மரைக்காயர்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய கவுன்சில் உறுப்பினர் முத்தின் மைந்தர் ஃபைஜுர் அலி, இளைஞர் அணி மாவட்டத் தலைவர் சுல்தான் கபீர், சமூக சேவகர் குவைத் ஆரிப் மரைக்காயர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிராஜுல் மில்லத் இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பேரவை மாநிலத் தலைவர் வழுத்தூர் லயன்.பஷீர் அஹமது தலைமையேற்கவியலாத சூழலில் பொதுச் செயலாளா அப்துல் நசீர் தலைமையுரை ஆற்றினார்.

பேரவையின் மாநிலப் பொருளாளரும், சிவகங்கை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயலாளருமான கே.இஸட்.இனாயத்துல்லாஹ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

Tags: செய்திகள்

Share this