Breaking News

உனது பொறுமையும் தொழுகையும் எதிரிக்குத் தண்டனையாகும்..!

நிர்வாகி
0

தண்டனைக்குரியவர்களுக்கு தண்டனையை எப்போது தரவேண்டும், எப்படி தர வேண்டும், அவர்கள் செய்த குற்றத்தின் தன்மை என்ன என்பதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும்.

கொராணா ஒரு கொடிய நோயாக இருக்கலாம். ஆனால் அது அப்பாவியையும் பாதிக்கிறது. அக்கிரமக்காரர்களையும் பாதிக்கிறது. அக்கிரமக்காரர்களுக்கு கொராணா வந்துவிட்டதால் சந்தோஷப்பட முடியாது. அப்படி சந்தோஷப்பட்டால் அப்பாவிகளுக்கு வந்த கொராணா பற்றி என்ன முடிவு செய்வது ?

தவறு செய்பவர்களெல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள் என்று நினைப்பதும் தவறு. அதிகாரத்தில் இருப்பதால் தவறு செய்பவர்களுக்கு கஷ்டங்களும், தண்டனைகளும் இல்லை என்று நாம் கூறமுடியுமா?

அவருடைய பதவியும், பொருளாதாரமும் அவர் அனுபவிக்கும் தண்டனையை மறைக்கலாம். ஆகவே தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்து கொண்டு தான் இருப்பார்கள். அதனால் அவர்களின் போலியான நடவடைக்கைகளை கண்டு அவர்களுக்கு தண்டனையில்லை என நாம் சோர்வடைந்து விடக்கூடாது.

மூஸா நபி அலைஹிஸ்ஸலாம்.. அவர்களின் சிறு கூட்டத்தை எளிதாக அழித்து விடலாம் என்று நம்பிக்கொண்டு ஃபிர்அவ்ன் பெரும்படையுடன் விரட்டிச் சென்றான். ஆனால் கடலைக் கடந்து மூஸா தப்பித்தார். ஃபிர்அவ்ன், அவனுடைய ராணுவத்தோடு அதே கடலில் மூழ்கிச் செத்தான். அபுஜஹில் மாபெரும் வீரன் அவனை நெருங்கவே மக்கள் பயப்படுவார்கள்.

தான் ஒரு மிகப் பெரும் வீரன் தன்னை யாரும் எதிர் கொள்ள முடியாது, என்ற இறுமாப்போடு பத்ர் யுத்தத்தில் கலந்து கொண்டான். ஆனால் வாளைக்கூட தூக்க முடியாத அளவுக்கு பலவீனமான இரண்டு சிறுவர்கள் அவனை வெட்டிக் கொன்றார்கள் என்பது தான் வரலாறு. ஆக, இறைவன் தண்டனை தர முடிவு செய்துவிட்டால் யாராலும் தடுக்க முடியாது. அதை அடையப் போகிறவர்கள் நிச்சயமாக அந்தத் தண்டனையை கற்பனை செய்ய முடியாது. ஏன் நம்மாலும் கற்பனை செய்ய முடியாது. இதுதான் இறைவன் நடைமுறை என்பதை கடந்தகால

வரலாறுகளின் மூலமாக நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்: اِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيْدٌ ‏ நிச்சயமாக, உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. (85:12)

பாபரி மஸ்ஜிதை இடித்த இடத்தில் இன்றைக்கு ஆணவத்துடன் ஒரு கூட்டம் கோவில் கட்டிக் கொண்டு இருக்கிறது. இறைவன் இவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறான். நாமும் எல்லா முயற்சிகளையும் செய்து விட்டோம். ஆகவே பிரார்த்தனை செய்தவர்களாக பொறுமையுடன் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ் கூறுகிறான்: وَاسۡتَعِيۡنُوۡا بِالصَّبۡرِ وَالصَّلٰوةِ ‌ؕ وَاِنَّهَا لَكَبِيۡرَةٌ اِلَّا عَلَى الۡخٰشِعِيۡنَۙ

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர ஏனையோருக்கு இது பாரமாகவே இருக்கும். (2:45) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: எது நடக்க வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ அதற்காக பிரார்த்தனை அதிகப்படுத்துங்கள்; ஏனென்றால் நீங்கள் உங்கள் இறைவனிடம் தான் கேட்கிறீர்கள்! (இப்னு ஹிப்பான், தப்ராணி)

இறைவன் மிகப்பெரியவன்! அல்குர்ஆன் சிந்தனைகள்

ஜேஎஸ்ரிஃபாயீ

Tags: இஸ்லாம்

Share this