லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலக திறப்பு விழா..!
லால்பேட்டை நகர இ.யூ. முஸ்லிம் லீக் அலுவலகத்தை மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர் அவர்கள் மாநில துணைத் தலைவர் Kநவாஸ்கனி MP முன்னிலையில் திறந்து வைத்தார் . நகர தலைவர் எஸ்.எம்.அப்துல் வாஜிது தலைமை வகித்தார்.
நகர செயலாளர் முஹம்மது ஆசிஃப் நகர பொருளாளர் தைய்யூப் முஹிப்பி ஆகியோர் வரவேற்றனர்
தேசிய கவுன்சில் உறுப்பினர் ஏ.எஸ்.அப்துல் ரஹ்மான் ரப்பானி தொடக்க உரையாற்றினார்
கடலூர் வடக்கு மாவட்ட தலைவர் ராஜா ரஹிமுல்லா, மாநில செயலாளர் கே.எம்.நிஜாமுத்தீன்,மாநில துணைச் செயலாளர்கள் இப்ராஹிம் மக்கி, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.#முஹம்மது_அபூபக்கர் மாநில துணைத் தலைவர் #Kநவாஸ்கனி_MP ஆகியோர் சிறப்புரையாற்றினர். நகர தலைவர் அப்துல் வாஜிது நன்றி கூறினார். மெளலவி தௌபீக் துஆ செய்தார்.
Tags: லால்பேட்டை