Breaking News

உன்னோடு நாம் பட்ட துயரங்கள் உலகம் உள்ளவரை மறக்காது கொரோனாவே...!

நிர்வாகி
0
உன்னோடு நாமிருந்த
ஒவ்வொரு மணித்துளியும்
மரணப்படுக்கையிலும்
மறக்காது கொரோனாவே..!
பிறந்த நிமிடங்களில்
தொட்டணைத்த உறவுகளும்
விலகி நின்றே உறவாடிய விதி
இதயத்தில் கனக்கிறதே
பார்வையிலே உறவுகளிடம்
பயத்தோடு சில நிமிடம்
மீற்றர் தூரத்தில் நலம் கேட்டு
நகர்ந்து சென்ற மறு நிமிடம்..!
மூச்சிரைக்கும் முகக் கவசமும்
சோப்பும் சானிடைசரும்
தூய்மைப் பணியினரின்
பெரும் கவனம்
பெரும் பாடு படுத்தினவே..
வேதனை தாளாமல்
நாலா புறங்களிலும்
யுத்த தளம் போலே
பயங்கரமாய் பல நாட்கள்
பாரபட்சமே பாராமல்
எல்லா ஊர்களிலும்
மரண பயம் விளைவித்தே
தூக்கம் தொலைந்த சில காலம்..
மின் விசிறிகளில் இளைப்பாறி,
தொடு திரைக்குள்
ஊடுறுவி,
இறுகிப்போன சக்கை மனங்களை ,
ஒரு மீற்றர் தொலைவதிலும் கண்டு கொள்ளவும் சிரமம் தந்தாய்.....
செல்லினைத் தட்டித் தட்டியே
செய்தியறிக்கை தேடித் தேடி
குனிந்த தலை நிமிராமலே
குழப்பங்களால் குழம்பிப் போனோம்
யாரைப் பார்த்து
ஆறுதல் யார் சொல்வது?
யாருக்கும் தோன்றவில்லை தவித்திருந்தோம்
தனிமைப் பட்டோம்..
மனக் குழப்பம் தீரவில்லை....
உண்மை எது பொய் எது பிரித்தறிய நாதியில்லை,
தொற்றா இல்லை சளியா
மருத்துவருக்கும் புரியவில்லை
எங்கே தொடங்கி
எங்கே முடியும்
அச்சங்கள் ஓயவில்லை
தொற்றென்று ஒருவர் வந்தால்
யாவருமே ஒதுங்கி நின்றோம்..
வெளி உலகும் தெரியவில்லை
அரச எச்சரிக்கை ஓயவில்லை
இயன்றவரை பாதுகாத்தோம் காற்றாய் வந்தா தொற்றிக் கொண்டாய?
பட்ட துயரம்
கனவினிலும் அழுகிறது,
பாலகனையும்
எரித்த ரணம்
நெஞ்சில் இன்னும் சுடுகிறது.. ....
அன்புடன் Riza ...✍️

Tags: கவிதை

Share this