லால்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா சபை பொதுக்குழு கூட்டம்..!
நிர்வாகி
0
ஜாமிஆ மன்பஉல் அன்வார் அரபுக் கல்லூரி தாருத் தஃப்ஸீர் கட்டிடத்தில் நகர ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லானா காஜி A.நூருல் அமீன் ஹள்ரத் அவர்கள் தலைமையில் ஜமாஅத்துல் உலமா சபையின் பொதுக்குழு கூட்டம் 21-9-2021 செவ்வாய் கிழமை காலை 10:30 மணிக்கு நடைப்பெற்றது
ஜாமிஆவின் மூத்த பேராசிரியர் மவ்லானா மவ்லவி காரி R.Z. முஹம்மது அஹ்மத் ஹள்ரத் அவர்கள் கிராஅத் ஓதினார்கள்
நகர ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் மவ்லவி A.R. ஸலாஹுத்தீன் மன்பயீ வரவேற்புரை நிகழ்த்தி தீர்மானங்களை முன்மொழிந்தார்
ஆரம்பமாக நகர ஜமாஅத்துல் உலமா சபையின் மூத்த உறுப்பினர்களான ஜமாஅத்துல் உலமா சபையின் ஒன்றுபட்ட தென்னாற்காடு மாவட்ட செயலாளராகவும், கெளரவ செயலாளராகவும் பணியாற்றிய இ.யூ முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவர் மவ்லானா தளபதி_ஷஃபீகுர்ரஹ்மான் மன்பயீஹள்ரத், மவ்லானா மவ்லவி அப்துல் ஹலீம் மன்பயீ ஹள்ரத் உள்ளிட்ட சமீபத்தில் வஃபாத் ஆகிவிட்ட ஆலிம் பெருந்தைகளுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவர்களின் மஃக்பிரத்திற்காக துஆ செய்யப்பட்டது
போதை மற்றும் ஆபாசப் படங்கள் போன்ற செயல்களில் இஸ்லாமிய இளைஞர்கள் ஈடுபடுவதை தடுக்க ஜும்மா பயான்கள், தனிநபர் சந்திப்பு, பெற்றோர்கள் சந்திப்பு, வியாபாரிகள் சந்திப்பு போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களை தொடர்ந்து உலமாக்கள் முன்னெடுப்பது.
என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இக்கூட்டத்தில் ஜாமிஆ மன்பஉல் அன்வார் பேராசிரியர்கள், நகர ஆலிம் பெருமக்கள் கலந்துக் கொண்டனர்.
மெளலானா தளபதி ஷபீகுர் ரஹ்மான் மறைந்த சில தினங்களில் தளபதியார் அவர்களின் மஃபித்திற்க்கு திருக்குர்ஆன் ஷெரீஃப் ஒதி ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் துஆ செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags: லால்பேட்டை