காவலர் சபியாவின் இல்லத்தில் SDPI கட்சி தேசிய நிர்வாகிகள் !
நிர்வாகி
0
டெல்லியில் பெண் காவலர் சாபியா செஃபி பாலியல் வன்கொடுமை படுகொலை! - SDPI நிர்வாகிகள் பெற்றோர்களை நேரில் சந்தித்து ஆறுதல்! - சட்ட போராட்டத்தில் துணை நிற்போம் என உறுதி!
டெல்லியில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட Civil Defense பெண் காவலர் சாபியா செஃபியின் வீட்டிற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத்தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்கள் அப்துல் மஜீத், இலியாஸ் தும்பே, செயலாளர் டாக்டர் தஸ்லீம் ரெஹ்மானி, ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சிலின் தேசிய துணைத்தலைவர் AILC வழக்கறிஞர் வழக்கறிஞர் செவ்விளம் பருதி உள்ளிட்ட நிர்வாகிகள் இன்று சென்றனர்.
சாபியா செஃபியின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக ஆறுதல் மற்றும் வருத்தத்தை பதிவு செய்தனர். சாபியா செஃபியின் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை உங்களோடு துணை நிற்போம் என்பதனையும், அவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளையும், இதர உதவிகளையும் எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கொள்ளும் என்பதை உறுதியளித்தனர்
Tags: செய்திகள்