Breaking News

அய்மான் சங்கம் அறிமுகம் செய்யும் 24 மணி நேரம் மக்கள் சேவை

நிர்வாகி
0
நமது அய்மான் சங்கம் கடந்த பல வருடங்களாக தொடர்ந்து தமிழர்களுக்கான பிரச்சனைகளை இந்திய தூதரகத்தின் மூலம் தீர்த்து வருகின்றது என்பது தாங்கள் அனைவரும் அறிந்த ஒன்றே!
அதனடிப்படையில் அபுதாபி வாழ் தமிழர்களின் தேவைகள் அதிகமானத்தை தொடர்ந்து அய்மான் சங்கத்தின் சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கத்தில் இன்ஷா அல்லாஹ், 2021ம் வருடம் மீலாது நபி விழாவை முன்னிட்டு அபுதாபியில் அய்மான் சங்கத்தில் மக்கள் சேவைக்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தமிழர்கள் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அல் அன்ஸார் என்கிற புதிய மக்கள் சேவை அணி நமது அய்மான் சங்கத்தின் தலைவர் அல்ஹாஜ் கீழக்கரை ஹெச் எம் முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் வழிகாட்டுதலில் துவங்கப்பட இருக்கின்றது.
இந்த சேவையின் மூலம் தமிழர்கள் சந்திக்கக்கூடிய அனைத்து பிரச்சனைகளுக்கும் அய்மான் சங்கத்தின் செயல் வீரர்களை கொண்டு வழிகாட்டல்கள் / செயல்பாடுகள் மற்றும் தீர்வுகள் காண, நாம் இருக்கக்கூடிய ஐக்கிய அரபு அமீரகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மற்றும் இந்திய தூதரகத்தோடு இணைந்து தமிழர்களுக்கான உதவிகளை இலவசமாக இஸ்லாம் காட்டித்தந்த மனிதநேயத்தோடு, இறைவனின் பொருத்தத்திற்காக நன்மையை நாடி செயல்படுத்த இருக்கின்றோம்.
அய்மான் சங்கத்தின் அல் அன்ஸார் சேவையை தொடர்புகொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள என்னை தொடர்புகொள்ளுங்கள் 0553038066, 0503104871, 0565096964, 0556081910, 0526269123, 0554735379,
மேலும் இத்திட்டத்தில் அய்மான் சங்கத்தோடு அல் அன்ஸார் சேவையில் சேர்ந்து பணியாற்ற விருப்பம் உள்ளவர்களும் அய்மான் நிர்வாகிகளை தொடர்புகொள்ளுங்கள்
அய்மானின் இப்புதிய சேவை அணி சிறந்து விளங்க அனைத்து நிர்வாகிகளும், உறுப்பினர்களும் ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அய்மான் சங்கம்
அபுதாபி

Tags: உலக செய்திகள்

Share this